பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு

Read Time:3 Minute, 46 Second

norway_flagஉலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வே, பிச்சை எடுப்பதை ஒழிக்க முடிவு செய்துள்ளது. இனி தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ளது. நார்வே நகரத் தெருக்களில் ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கையில் ஒரு சிறு டப்பாவை வைத்தபடி பிச்சை எடுப்பதைப் பார்க்கலாம்.

குறிப்பாக தலைநகர் ஆஸ்லோவில். கடந்த சில ஆண்டுகளில் நார்வேயில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆரம்பித்துள்ளதாம். பிச்சைக்காரர்கள் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நார்வேயில் ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாக நோவா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் இவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே. கருத்துக் கணிப்பு இந்த பிச்சைக்காரர்களை என்ன செய்யலாம் என்று நாடு தழுவிய அளவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் 60 சதவீதத்தின் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் மாதிரி என கருத்துத் தெரிவித்துள்ளனர். 3 மாத சிறை இனி நார்வேயில் பிச்சை எடுப்பவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை வழங்கவும் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் அந்நாட்டில் உள்ள நகராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 2015-லிருந்து இது அமலுக்கு வரக் கூடும். எதிர்ப்பு ஆனால் இந்த சட்டத்துக்கு நார்வே நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை இந்தத் தடை குலைத்துவிடும். கருணையற்ற நாடு என்ற பெயர்தான் மிஞ்சும் என அக்கட்சிகள் கூறியுள்ளன. உதவக் கூடாது என்ற எண்ணமே… கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெல் இங்கல்ப் ரோப்ஸ்டட் கூறுகையில், ‘பிச்சையெடுப்பவர்கள் அத்தனை பேரும் கிரிமினல்கள் என்பதை ஏற்க முடியாது.

இயலாதவர்கள்தான் பிச்சையெடுக்கிறார்கள். பிறருக்கு உதவ மனமில்லாதவர்களே, அவர்களை ஒழிக்கக் கேட்கிறார்கள். இந்த தடைச் சட்டம் தவறானது,’ என்றார். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? நார்வே வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ப்ரோட் சுல்லன்ட் கூறுகையில்,

‘பிச்சைக்காரர்கள் ஒரு பிரச்சினையே அல்ல. ஐரோப்பாவின் எந்த நகரத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை…! எங்கும் இருக்கிறார்கள். எந்த நாடும் இப்படி தடை போட நினைத்ததில்லை. ஒரு மனிதன், யாரையும் தொந்தரவு செய்யாமல் தனக்கு உதவி கோரி கையேந்த உரிமை இருக்கிறது. இந்தத் தடை தேவையற்றது,’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயால் தெருச்சண்டை போட்ட, சங்கீதா தர்மசங்கடத்தில்!
Next post ஷாருக் பாத்ரூமில் தங்க தொட்டி