பாலியல் உறவுகொள்ள மறுத்த 25 வயது ஆண் : கத்தியுடன் வீதியில் துரத்திய 52 வயது பெண்!!
தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த 25 வயது இளைஞன் ஒருவரை 52 வயது பெண்ணொருவருடன் கத்தியுடன் வீதியில் துரத்திச் சென்ற சம்பவமொன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
குரு பைன்லி என்ற 25 வயது இளைஞனையே அவரது 52 வயது காதலியான எலிசபெத் ஹைலி கத்தியுடன் விரட்டியதாக பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புளோரிடாவிலுள்ள ஜென்ஸன் பீச் எனுமிடத்திலுள்ள வீடொன்றில் மேற்படி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். இதன் பின்னர் பைன்லியை உறவுக்கு அழைத்துள்ளார் எலிசபெத். இதனை பைன்லி மறுக்கவே ஆத்திரமடைந்து கத்தியுடன் வீதியில் விரட்டிச் சென்றதாக பைன்லி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பைன்லியை துரத்திய எலிசபெத் வழியில் கண்ணில் தென்பட்ட சில பொருட்களை கத்தியால் கீறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் எலிசபெத்தை கைது செய்துள்ளனர்.
Average Rating