ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப் பெண்களின் படங்கள்!!

Read Time:2 Minute, 16 Second

19-1403177117-brazil-women-hot-600இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் குத்துச் சண்டை வீரர் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் சில விஷமிகள் நிர்வாணப் பெண்களின் படத்தைப் போட்டு ஹேக் செய்துள்ளனர். ரமலான் நோண்பு மாதத்தின்போது இப்படி நடந்ததால் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால் தான் இதைச் செய்யவில்லை என்றும் ஹேக்கர்களே இதற்குக் காரணம் என்றும் ஆமிர்கான் விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்தவர் ஆமிர்கான். 27 வயதான இவர் குத்துச் சண்டை வீரர் ஆவார். இவரது டிவிட்டர் பக்கத்தில் இரு பெண்கள் நிர்வாண நிலையில் படுத்துக் கிடப்பதைப் போன்ற படம் திடீரென இடம் பெற்றது.

இதனால் அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரமலான் நோண்பு மாதத்தின்போது நிர்வாணப் படங்களைப் பார்க்கக் கூடாது என்ற வழிமுறை உள்ளது. இந்த நிலையில் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் இப்படிப் படம் வெளியானதால் பலரும் கோபமடைந்தனர். பலரும் ஆமிர்கானை வசை பாட ஆரம்பித்தனர்.

ஆனால் உடனடியாக இந்தப் படத்தை நீக்கிய ஆமிர்கான், அதற்காக மன்னிப்பும் கேட்டார். அதேசமயம் இதைத் தான் வெளியிடவில்லை என்றும், ஹேக்கர்களின் விஷமம் இது என்றும் அவர் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன்புதான் இருவரை ஆமிர்கான் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஷமம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலித்து ஏமாற்றிய காதலியை கழுத்து நெரித்து கொன்ற காதலன்!!
Next post நமீதாவின் ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்கும் விருப்பமா?