எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று.. இவருக்கு விந்தனு என்றாலே அலர்ஜி!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான அலர்ஜி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது விந்தனு அலர்ஜி. இதனால் இயல்பான முறையில் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் இந்தப் பெண் தவித்து வருகிறார்.
தற்போது ஆணுறை அணிந்தபடிதான் இவரது கணவர் உறவில் ஈடுபடுகிறாராம். இவரது உடம்புக்குள் விந்தனு போனால் உடனடியாக இவரது உடம்பெல்லாம் தடிப்பு ஏற்பட்டு விடுகிறது. உடம்பில் எரிச்சல் ஏற்படுகிறது. மூச்சு விட முடியாமல் திணறிப் போய் விடுகிறார்.
மிகவும் அரிய வகை அலர்ஜி இது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டிஎல்சி டிவியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ளுநஒ ளுநவெ ஆந வுழ வுhந நு.சு.என்ற நிகழ்ச்சியில் இவரது கதை ஒளிபரப்பாகியுள்ளது.
சில பெண்களுக்கு கணவர் என்றாலே அலர்ஜியாகி விடும். ஆனால் கிறிஸ்டின் என்ற பெயர் கொண்ட இந்த அமெரிக்கப் பெண்ணுக்கோ அவரது கணவர் சீன் என்றால் உயிர். ஆனால் அவரது உயிரணுதான் இவருக்குப் பெரும் பிரச்சினையாகியுள்ளது.
Average Rating