இனப்பாரம்பரியத்தை பின்பற்றாத பெண்ணின் 15 குழந்தைகளையும் கொன்ற ஊர் பெரியவர்கள்!!

Read Time:2 Minute, 23 Second

eathiyopiyaதென் எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கிலுள்ள டஸ் எனும் கிராமத்தை சேர்ந்த புகோ பல்குடா என்ற 45 வயது பெண் தன்னால் பெற்றெடுக்கப்பட்ட 15 பிள்ளைகளும் பிறந்தவுடன் கிராமப் பெரியவர்களால் கொல்லப்பட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

பல்குடா தனது கரோ இனத்தின் பாரம்பரியத்துக்கு மதிப்புக் கொடுக்காமை காரணமாக அவருக்கு பிறந்த பிள்ளைகளை சபிக்கப்பட்டவர்களாக கருதி ஊர் பெரியவர்கள் பசியுடன் காத்திருக்கும் முதலைகளுக்கு அந்த குழந்தைகளை உயிருடன் வீசி இரையாக்கினர்.

கரோ இனத்துவ வழக்கப் பிரகாரம் இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதற்கு முன் பாரம்பரிய காளைப் பாய்ச்சல் வைபவமொன்றில் பங்கேற்பது கட்டாயமாகும்.

ஆனால், பல்குடா அத்தகைய காளைப் பாய்ச்சலில் ஈடுபடாத நபரொருவரை திருமணம் செய்தார். இந்நிலையில் ஊர் பெரியவர்கள் பல்குடாவுக்கு பிறக்கும் பிள்ளைகள் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் எனவும் அந்தக் குழந்தைகள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு துரதிஷ்டத்தை தேடித்தரும் வகையிலமைந்த, சபிக்கப்பட்ட குழந்தைகள் எனவும் ஊர் பெரியவர்கள் பிரகடனம் செய்தனர்.

இதனையடுத்து பல்குடாவுக்கு அடுத்தடுத்து பிறந்த 7 மகன்மாரும் 8 மகள்மாரும் ஊர் பெரியவர்களால் முதலைக்கு இரையாக்கப்பட்டனர். இந்த சாபக்குழந்தைகளை கொல்லும் நடவடிக்கையை கைவிட கரோ பெரியவர்கள் 2012 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்திருந்த போதும் மேற்படி சாபக்குழந்தைகளைக் கொல்லும் செயற்கிரமத்தால் அங்கு ஒவ்வொரு வருடமும் 300 குழந்தைகள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்றொழிலுக்கு போவதாக கூறிச் சென்றவர், மீன் வாடியில் சடலமாக மீட்பு!!
Next post சிறுத்தை தாக்கி பெண் பலி: சிறுவன் வைத்தியசாலையில்!!