எந்த நேரத்தில் புகைக்கலாம்!!

Read Time:9 Minute, 19 Second

young-woman-smoking-cigar-010நீங்கள் புகை பிடிப்பவரா?தினமும் உங்கள் முதலாவது சிகரட்டை எந்த நேரத்தில் புகைப்பீர்கள்?தினமும் எத்தனை சிகரட்டுகளைப் புகைப்பீர்கள்.
உங்களது முதலாவது சிகரட்டை எப்பொழுது புகைக்கிறீர்கள் என்பதற்கும் வாய்ப் புற்றுநோய் மற்றும் சுவாசப்பை புற்றுநோய் எதிர்காலத்தில் வருவதற்கும் நிறையத் தொடர்பிருக்கிறதாம்.TSNA (tobacco-specific n-nitrosamines) என்பது புகையிலைக்கே உரித்தான இரசாயனப் பொருட்களாகும். அதில் 4-(methylnitrosamino)-1-(3-pyridyl)-1-butanone (NNK) என்பது முக்கியமானது அது புற்றுநோயைத் தூண்டக் கூடியது. அதாவது புற்றுநோய்த் தூண்டி carcinogen எனலாம். இது உடலில் சேர்ந்து மாற்றமுறும்போது NNAL என்பதாக மாறுகிறது.

எனவே குருதியில் அதிகளவில் NNAL இருப்பவர்களுக்கு புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கருதலாம் அல்லவா? புகைப்பதால்தான் இதன் செறிவு குருதியில் அதிகரிக்கும்.

இந்த பற்றிய மற்றொரு விடயத்தை கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.

காலை எழுந்தவுடன் …

அண்மையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அது சொல்வதுதான் இது.

காலையில் விழித்தெழுந்தவுடன் புகைப்பவர்களுக்கே குருதியில் NNALகுருதியில் மிக அதிகமாக இருந்ததாம். விழித்தெழுந்தவுடன் எனும்போது கட்டிலில் இருந்தே புகைப்பது என அர்த்தம் அல்ல. விழித்தெழுந்த அரை மணி நேரத்திற்குள் புகைக்க ஆரம்பிப்பவர்களுக்கு இதன் செறிவு மிக அதிகமாம்.

காலை எழுந்தவுடன் படிப்பவர்கள் அல்ல அவர்கள். காலை எழுந்தவுடன் புகைப்பவர்கள்.

இதில் ஆச்சரியமான அம்சம் என்னவெனில் அவர்கள் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறார்கள் என்பதை விட காலையில் விழித்தெழுந்த ½ மணி நேரத்தில் புகைப்பதுதான் குருதியில் NNAL லை அதிகம் அதிகரிக்கிறதாம்.

Public health sciences Professor Joshua Muscat, Asst Prof Steven Branstetter ஆகியோரால் செய்யப்பட்ட இந்த ஆய்வு Cancer, Epidemiology, Biomarkers and Prevention என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

அந்த ஆய்வின் பிரகாரம் ஆய்வற்கு உட்பட்ட 1945 போரில்

32 சதவிகிதமானவர்கள் காலை எழுந்து 5 நிமிடங்களுக்குள்ளும்
மேலும் 31 சதவிகிதமானவர்கள் காலை எழுந்து 6 முதல் 30 நிமிடங்களுக்குள்ளும் புகைத்தார்கள்.
18 சதவிகிதமானவர்கள் 31 முதல் 60 நிமிடங்களுக்குள்ளும் புகைத்தார்கள்.
மிகுதி 19 சதவிகிதமானவர்கள் மட்டுமே காலை எழுந்து ஒரு மணி நேரத்தின் பின் புகைத்தார்களாம்.
விழித்தெழுந்தவுடன் புகைப்பவர்களுக்கு குருதியில் NNAL அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?.

மிக ஆழமாக உள்ளெடுத்தும் புகைப்பதும் சிகரட்டை முழுமையாகப் புகைப்பதும் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் அவசரங்கள் நெருக்கீடுகள் என எதுவும் கிடையாது. மனம் அமைதியாக இருக்கும். ஆற அமர இருந்து ஆழப் புகையை உள்ளெடுத்து முழுமையாகப் புகைத்ததால் புற்றுநோய்த் தூண்டிகளை கூடுதலாக உள்ளெடுத்திருப்பார்கள்.

சிலருக்கு ஆனந்தமாக கொமேட்டிலிருந்து இதை ஒரு பிடி பிடித்தால்தான் மலம் கழியும் என்பதைப் பற்றி ஆய்வு கிடையாது.

மற்றொரு ஆய்வு

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இந்த NNAL பற்றிய மற்றொரு தகவலை இங்கு குறிப்பிடுவது அவசியம். ஒருவரது உடலில் NNAL இருப்பதை அறியவும் அளவிடவும் முடியும். இரத்தப் பரிசோதனை தேவையில்லை. சிறுநீர்ப் பரிசோதனை செய்தால் போதும். சிறுநீரில் கலந்துள்ளதைக் அளவிடுவதன் மூலம் குருதியில் கலந்துள்ளதைக் கணக்கிட்டு அறிய முடியும்.

இதன் மூலம் புகைப்பவர்களை மட்டுமின்றி வேறுவகைகளில் புகையிலையின் தாக்கத்திற்கு உள்ளானவர்களையும் கண்டறிய முடியும்.

அதாவது மூக்குத்தூள் போடுபவர்கள், வெற்றலையோடு புகையிலை சப்புபவர்கள் போன்றோரில் இந்த நச்சு எவ்வளவு கலந்திருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

இவற்றைத் தவிர தமது சூழலிலிருந்து புகையிலையின் தாக்கத்துக்கு ஆளானவர்களின் பாதிப்புகளையும் கணித்தறிய முடியும்.

அதாவது புகையிலையை அறுவடை செய்பவர்கள், புகையிலையோடு தொடர்புடைய தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றவர்கள் புகைக்கும்போது அருகில் இருப்பவர்கள் எனப் பலவாகும்.

ஆனால் புகைப்பவர்களில் NNAL செறிவானது புகைக்காதவர்களை விட 50 முதல் 150 மடங்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீட்டில் புகைப்பது, தொழிலகத்தில் புகைப்பது போன்றவற்றால் அருகில் உள்ளவர்கள் பாதிப்படைகிறார்கள்.

வீட்டில் கணவன் புகைத்தால் அதிலிருந்து வரும் நச்சு வீட்டில் உள்ள மனைவி பிள்ளைகள் என அனைவரையும் பாதிக்கும்.
ஆனால் பெரியவர்களை விட 2-3 மடங்கு அதிகமாக குழந்தைகளைச் சென்றடைகிறது என்கிறது ஆய்வு.
அது மாத்திரமல்ல கர்ப்பணியாக இருந்தால் நச்சுக் கொடி ஊடாக கர்ப்பப்பையிலுள்ள கருவையும் இந்த NNAL நச்சுப் பொருள் சென்றடைகிறது என்பதையும் ஆய்வில் கண்டறிந்தார்கள்.

கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

இந்த ஆய்வு சொல்வதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

‘புகைக்கலாம், எவ்வளவும் புகைக்கலாம், ஆனால் காலையில் எழுந்தவுடன் மட்டும் புகைக்கக் கூடாது என்பதா?’

நிச்சயமாக இல்லை.

புகைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பல வருடங்களாகவே பல ஆய்வுகள் ஏற்கனவே வந்து அவற்றின் ஆபத்துக்களை எமக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டன. புகைப்பதால் புற்றுநோய்கள் மட்டுமின்றி இருதய நோய்கள், மாரடைப்பு, ஆஸ்த்மா, சிறுநீரக நோய்கள், ஆண்மைக் குறைபாடு என பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படும்.

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் – Smoking
தாய் புகைத்தலும் குழந்தையின் எதிர்கால உளநோய்களும்
எனவே அவை அதைப் பற்றிப் பேசவில்லை.

எந்த நேரத்தில் புகைப்பதால் ஆபத்துகள் அதிகம் என்பதைப் பற்றி மட்டுமே ஆராய்ந்தது. அதுவும் NNAL லால் ஏற்படக் கூடிய ஆபத்தை மட்டுமே பேசியது.

இரண்டாவது ஆய்வானது புகைப்பவருக்கு மட்டுமின்றி அருகில் இருக்கும் இச்சையின்றிப் புகைத்தோருக்கும் (passive smoking)) ஆபத்து ஏற்படும் என்பதைத் தெளிவுறுத்துகிறது.

அதுவும் குழந்தைகளையும் கர்ப்பப்பையில் உள்ள கருவையும் பாதிக்கும் என்கிறது.

ஆகவே புகைக்காதீர்கள்.

எந்த நேரமானாலும் புகைக்காதீர்கள்.

உங்களுக்காக மட்டுமின்றி உங்கள் அருகில் உள்ள உங்கள் அன்பிற்குரிய மனைவி, குழந்தைகள் நண்பர்கள் போன்ற அனைவரது நலத்திற்காகவும் புகைக்க வேண்டாம்.என்றும் எப்பொழுதும் புகைக்கவே வேண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயம், தாய் பலி!!
Next post நடிகை ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை!!