கருணை கொலையை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு!!

Read Time:4 Minute, 12 Second

195518239death-penaltyசுப்ரீம் கோர்ட்டில், ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு நோயாளி, குணமடைய மாட்டார் என்று ஒரு மருத்துவ நிபுணர் கருதினால், செயற்கை சுவாச கருவிகளை அகற்றி, அவர் மரணம் அடையும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அந்த நோயாளியின் நோய் வேதனை நீடிக்கவே செய்யும். கவுரவமாக இறக்கும் உரிமையை ஒருவரின் அடிப்படை உரிமை ஆக்க வேண்டும். இதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். செயற்கை சுவாசம் உதவியுடன், வாழ்நாளை நீட்டிப்பது, இயற்கையான வாழ்நாளை செயற்கையாக நீட்டிப்பது ஆகும். அத்தகையவர்கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை முதலில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இதில், முரண்பாடான கருத்துகள் நிலவுவதாலும், சட்டம் குறித்த தெளிவு தேவைப்படுவதாலும் அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாக நீதிபதிகள் கூறினர். அதன்படி, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது.

அதன் முன்பு, நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கருணை கொலையை சட்டபூர்வமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த விவகாரம், கோர்ட்டில் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. பாராளுமன்றம்தான் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசைப் பொறுத்தவரை, கருணை கொலையை ஏற்கவில்லை. அது ஒருவகையான தற்கொலை. தற்கொலை, ஒரு குற்றம். கருணை கொலையை சட்டபூர்வமாக்கினால், அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதை சட்டபூர்வமாக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘கருணை கொலையை சட்டபூர்வமாக்காமல் இருப்பதற்கு, அது தவறாக பயன்படுத்தப்படும் என்பதை காரணமாக கூறக்கூடாது. தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கலாம் என்று கூறுங்கள்’ என்று கூறினர்.

மேலும் மனுதாரரைப் பார்த்து, ‘கருணை கொலை பற்றி உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மரணத்தை ஏற்படுத்த குறைந்த வேதனை கொண்ட வழி என்ன?’ என்று கேட்டனர். பின்னர், இந்த விவகாரம், அரசியல் சட்டம் மட்டுமின்றி, தார்மீகம், மதம், மருத்துவம் ஆகியவை சம்பந்தப்பட்டது என்பதால், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பது அவசியம் என்று நீதிபதிகள் கூறினர்.

எனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஆர்.அந்திஅர்ஜுனாவை ஆலோசகராக அரசியல் சட்ட பெஞ்ச் நியமித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைக்கு பல கோடி ரூபாயில் வீடு வாங்கி தந்த நடிகர்!!
Next post அதிகரிக்கும் உடல் எடை – குளிர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!!