இணையத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ எது தெரியுமா?

Read Time:2 Minute, 27 Second

752298373secvp3பொம்மையை காட்டி அழுத குழந்தையை நாய் சமாதானப்படுத்திய காட்சியை இணைய தளத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

நாய் மனிதர்களின் உற்ற நண்பன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவை மனிதர்களுடன் நெருங்கி பழகுகின்றன. தங்களது எஜமானர்கள் ஏவும் வேலைகளை செய்கின்றன.

அதே நேரத்தில் நாய்கள் பாசமும், கருணையும் வாய்ந்தவை. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

வீறிட்டு அழும் குழந்தையை சமாதானப்படுத்த ஒருநாய் பொம்மையை காட்டி மகிழ்வித்த காட்சி சமீபத்தில் ‘யுடியூப்’ இணைய தளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது.

அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த லாரா என்ற ஒரு பெண் குழந்தை தொட்டிலில் படுத்தபடி தொடர்ந்து அழுத கொண்டே இருந்தது. அதை பார்த்து பொறுக்க முடியாத ‘சார்லி’ என்ற நாய் துள்ளி குதித்து வீட்டின் அறைக்குள் ஓடியது.

பின்னர் அங்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்த ஒரு பொம்மையை எடுத்து வந்து குழந்தையிடம் காட்டியது. இருந்தும் அக்குழந்தை அழுக்கையை நிறுத்தவில்லை. எனவே மீண்டும் சென்று குழந்தைக்கு பிடித்தமான வேறு ஒரு பொம்மையை எடுத்த வந்து முகத்துக்கு அருகே காட்டி மகிழ செய்தது.

அதை தொடர்ந்து குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு மகிழ்ச்சி புன்னகை சிந்தியது. அந்த வீடியோ காட்சியை ‘யுடியூப்’ இணைய தளத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

மேலும் நாய் சார்லி பெயரில் ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் அந்த நாயின் சாகச நிகழ்ச்சிகள் தினசரி வெளியிடப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளி கொடூரம்!!
Next post வேட்டைக்காரர்களால் ஆபத்து: தென் ஆப்பிரிக்க தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருகங்களை வெளியேற்ற திட்டம்!!