பாலஸ்தீனத்தில் பலி 572-ஆக உயர்வு: போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முயற்சி!!

Read Time:2 Minute, 49 Second

21be7f48-3a8a-43ee-ae88-57788a36eb2b_S_secvpfஇஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைவழி தாக்குதல்களையும் தொடங்கியது. இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று நடந்த குண்டு வீச்சு மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 54 பேர் பலியாகினர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு சாவு எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

ரபா, டெர்அல்–பலா ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவை தவிர 10–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 2 பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த போது அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் இதுவரை 13 ராணுவ வீரர்கள் போரில் பலியாகி இருந்தனர். நேற்று ஒருநாள் மட்டும் மேலும் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை (பொதுமக்களையும் சேர்த்து) 27 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல்–காஸாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் பாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் பேசியுள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் சமரச பேச்சு வார்த்தை நடத்த எகிப்து தலைநகர் கொய்ரோ புறப்பட்டு சென்றுள்ளார்.

போர் தொடர்ந்து உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி ஏற்படுத்த அமெரிக்காவும், ஐ.நா.சபைையும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

காஸாவில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடந்தது. அப்போது உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட ஆலோசிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை கருணை கொலை செய்ய மிரட்டல்!!
Next post அயர்லாந்தில் 9 வயது தம்பியை குத்திக் கொன்ற வாலிபர் தூக்கிட்டு இறந்த பரிதாபம்!!