சிறுவர் துஷ்பிரயோகம் – மூன்று மாநிலங்களுக்கு நோட்டீஸ்!!

Read Time:4 Minute, 24 Second

498375144Untitled-1சிறுவர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கக் கோரி மூன்று மாநிலங்களுக்கு இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

பெங்களூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 2ம் திகதி அன்று 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பார்வையற்றோருக்கான பள்ளியில் உள்ள மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாகவும் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை அம்மாநில பொலிஸார் தவறான வழக்கில் உட்படுத்தியதால் அவன் மரணமுற்றது தொடர்பாகவும் அந்தந்த மாநில அரசுகள் விளக்கம் அளிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசாங்களுக்கு தானாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனியார் பள்ளியொன்றின் உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரும், காவலாளி ஒருவரும் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அம்மாநில பொலிஸ் ஸ்கேட்டிங் பயிற்சியாளரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து தேசிய மனித உரிமை ஆணையம், கர்நாடக அரசுக்கும் அம்மாநில பொலிஸ் துறையினருக்கும் நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் ஒரு அறிக்கையை சம்ர்பிக்குமாறு அம்மாநில தலைமை செயலாளர், பொலிஸ் இயக்குனர், கர்நாடகா அரசு மற்றும் பெங்களூரு மாவட்ட அரசு ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சமயம் மற்றொரு செய்தி வெளியிட்டில், ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளி ஒன்றில் 10 வயதுக்கும் குறைவான மூன்று கண்பார்வையற்ற சிறுவர்களை மனிதாபினாமில்லாத முறையில் நடத்தியதாக அப்பள்ளியின் முதலவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வெளியாகியுள்ள செய்தியினை அடிப்படையாக கொண்டு அம்மாநில தலைமை செயலாளர் மற்றும் காக்கிநாடா மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுபியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்போல் மகாராஷ்டிர மாநில தலைமை செயலாளருக்கும் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க கூறி வழங்கப்பட்டுள்ள நோட்டீசில், தேசிய மனித உரிமை ஆணையம் , பழங்குடி இனத்தை சேர்ந்த பாபு தாக்ரே என்கிற 16 வயது சிறுவனை ஒரு சம்பந்தமில்லாத திருட்டு வழக்கில் பொலிஸார் தவறாக அடையாளம் கண்டு சிக்க வைத்ததால்தான் அவன் மரணமுற்றதாக வந்த பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!
Next post பிரபல நடிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்!!