தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்: 39 லட்சம் மக்கள் பாதிப்பு!!

Read Time:1 Minute, 39 Second

6372cd5c-1314-4dde-a999-16b9a4b4b9f8_S_secvpfதெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தெற்கு சூடான் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர். இதனால், சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதி ஒதுக்கீட்டை துரிதமாக வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சூடானில் இருந்து பிரிந்து 3 வருடமே ஆகிறது. ஆகவே எண்ணெய் வளம் மிக்க நாடான தெற்கு சூடான், அதன் வளர்சியை மேம்படுத்த முயலாமல் இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துணை அதிபர் ரேக் மாச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதனாலும் பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் மகனின் மரணத்தை, மறுவிசாரணை செய்யும் புலிப்பார்வை: இயக்குனர் பிரவீன்காந்தி!!
Next post மீண்டும் கோலிவுட்டில் சார்மி!!