By 30 July 2014 0 Comments

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!

d4178e26-e32f-4809-a0be-f96f0f1dbb92_S_secvpfகள்ளக்காதல்…

3 பெண்கள்…

ஒரு உயிர் பலி.

கடந்த 3 நாட்களாக சென்னை போலீசாரை கலங்கடித்துக் கொண்டிருந்த திருவொற்றியூர் விக்கியின் கொலை வழக்கு 10 பேர் கைதுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

திருமணமான ஒரு பெண்ணை தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும், பணியாளரும் போட்டி போட்டு காதலிக்க… அதில் பண பலம் படைத்தவர் ஜெயித்து, இன்னொருவரை போட்டுத் தள்ளியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான சதாசிவம், பணியாளர் விக்கி, அங்கு பணியாற்றிய பெண் ஊழியரான சுஜாதா ஆகியோர் இடையே நீடித்து வந்த கள்ளக்காதல் உறவும், இதன் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுள்ள கடத்தல்–கொலை சம்பவங்களும் சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பு காட்சிகளாக மாறிப் போயுள்ளன. அதன் பின்னணி பற்றி முழுமையாக பார்ப்போம்.

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதாசிவம் தனது நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய சுஜாதா என்ற பெண் மீது கள்ளக்காதல் வயப்பட்டார். சுஜாதாவின் கணவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். சதாசிவம்–சுஜாதாவின் கள்ளக்காதலுக்கு இடையில் புகுந்து சாதாரண பணியாளரான விக்கி தனது வேலையை காட்டத் தொடங்கினார். சதாசிவத்தை விட வயது குறைவானவர் என்பதால், சுஜாதாவுக்கு விக்கியின் மீதும் காதல் வந்தது. இந்த முக்கோண காதல் கொஞ்சம் கொஞ்சமாக முற்றி கடைத் தெருவுக்கும் வந்து விட்டது.

விக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் செல்வது, ஒன்றாக சுற்றுவது என சுஜாதாவின் கள்ளக் காதல் கொடிகட்டி பறக்க தொடங்கியது. இது சதாசிவத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்த… அவர் விக்கியை அழைத்து கடுமையாக கண்டித்தார்.

தேவையில்லாமல் என்னுடைய விவகாரத்தில் தலையிடாதே… ஒதுங்கிக் கொள் என சதாசிவம் விடுத்த எச்சரிக்கை விக்கியின் காதில் விழவில்லை. இதனால் எரிச்சல் அடைந்த சதாசிவம், தனது நிறுவனத்தில் இருந்து விக்கியை பணி நீக்கம் செய்தார்.

ஆனால் இதற்கெல்லாம் விக்கி அஞ்சவில்லை. எப்போதும் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுஜாதாவுடனான கள்ளக் காதலை தொடர்ந்தார். வேலையை விட்டு நின்ற பின்னரும் பலமுறை தனது மோட்டார் சைக்கிளில் சுஜாதாவை அழைத்துச் சென்று சதாசிவத்தின் கம்பெனியிலேயே கொண்டு விட்டுள்ளார்.

நாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், விக்கி கேட்கவில்லையே எனவே அவரை காலி செய்துவிட வேண்டியதுதான் என்ற எண்ணம் சதாசிவத்தின் மனதில் தோன்றியுள்ளது.

இதனை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த எஸ்தர்ராணி என்ற பெண்ணிடம் சதாசிவம் கூறியுள்ளார். இதற்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கூறிய எஸ்தர், முன் பணமாக ரூ.2 லட்சத்தை வாங்கிக்கொண்டு தனது திரைமறைவு தாதாயிசத்தை தொடங்கினார்.

எர்ணாவூரில் டாஸ்மாக் பாரில் பணியாற்றி வரும் விமல் மூலமாக விக்கியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, கடந்த மாதம் 28–ந் தேதி அன்று எஸ்தர்ராணியே விக்கிக்கு போன் செய்து திருவொற்றியூர் சுங்கச்சாவடிக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் தயாராக இருந்த வாடகை காரில் விக்கியை தூக்கிப் போட்டுக் கொண்டு மாதவரம், செங்குன்றம் வழியாக கார் ஆந்திரா நோக்கி பறந்தது. காருக்குள் எஸ்தர் ராணியின் தாய் சாந்தியும் இருந்துள்ளார். விமல் மற்றும் அவனது கூட்டாளிகளும் காருக்குள் இருந்தனர்.

காருக்குள் வைத்தே விக்கியை அடித்து உதைத்து தங்கள் வழிக்கு கொண்டு வர நினைத்துள்ளனர். சுஜாதாவை இனி… பார்க்கக் கூடாது, பேசக்கூடாது என்று எஸ்தர் ராணியின் தாயான சாந்தி, கடுமையாக மிரட்டியுள்ளார். ‘தூள்’ சொர்ணக்கா போல மாறிய சாந்தி, எவ்வளவோ மிரட்டிப் பார்த்தும் விக்கி மனம் மாறவில்லை. இதனால் திருப்பதி வரை காரில் சென்ற சாந்தி பின்னர் சத்தமில்லாமல் அங்கே இறங்கி சென்னைக்கு பஸ் பிடித்து வந்து விட்டார்.

இவர்கள் காருக்குள் வைத்து விக்கியை அடித்து உதைப்பதை பார்த்த வாடகை கார் டிரைவர் இடையிலேயே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார். அதன் பின்னர் விமலே காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வைத்து கொலை செய்வதற்கு முன்பும் விக்கியை மிரட்டியுள்ளனர். சுஜாதாவுடனான காதலை துண்டித்துவிட்டு எங்காவது போய் உயிர் பிழைத்துக் கொள் என்று கூறியுள்ளனர். ஆனால் சுஜாதா மீது விக்கி வைத்திருந்த காதலும், ஆசையும் அவரது உயிரை பறித்து விட்டது.

விமலும், அவனது கூட்டாளிகளும் விக்கியை கழுத்தை அறுத்து கொன்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்தனர். பின்னர், சென்னைக்கு வந்து மீதி 5 லட்சம் பணத்தை சதாசிவத்திடம் வாங்கி அனைவரும் பங்கு போட்டுக் கொண்டனர்.

இந்த வழக்கில் எஸ்தர்ராணி, அவரது தாய் சாந்தி, கள்ளக்காதலி சுஜாதா, பாபு, சதாசிவம், கமலக்கண்ணன், விமல், பாண்டு, ரமேஷ், ராஜன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல நேரங்களில் நல்ல காதலே உயிர்களை காவு வாங்கி விடுகிறது. கள்ளக்காதல் விட்டு வைக்குமா என்ன?Post a Comment

Protected by WP Anti Spam