HATE STORY 2 படத்திற்கு திடீர் தடை: காரணம் அரசியலா?
கடந்த 18ம் திகதி இந்தியா முழுவதும் வௌியாகி பெரும் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படமான Hate Story 2 என்ற படத்திற்கு கர்நாடகா மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
தொலைக்காட்சி நடிகர்களான சுஷாந்த் சிங், சுர்வீன் செளலா, ஜெய் பன்சாலி ஆகியோர் நடிப்பில் விஷால் பண்டியா இயக்கிய Hate Story 2 கடந்த 18ம் திகதி உலகம் முழுவதும் வௌியாகியது.
வெறும் ரூ.11.8 கோடி செலவில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 7 நாட்களில் இந்தியாவில் மட்டும் 25.6 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் ரூ.50 கோடி வசூலாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக அரசு இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், கர்நாடக மாநில முக்கிய அரசியல் புள்ளி ஒருவரை இந்த படம் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
Average Rating