தொழில் அதிபரிடம் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ரூ.3¼ லட்சம் மோசடி!!

Read Time:1 Minute, 53 Second

f5ea787a-e0b6-47c8-9535-ed96099aff1a_S_secvpfகோவை புலிய குளத்தை சேர்ந்தவர் விமல் (வயது 30). தொழில் அதிபர். இவர் தனது தொழிலை அபிவிருந்தி செய்வதற்காக கடன் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராணியுடன் விமலுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவரிடம் விமல் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர் நபார்டு வங்கி மூலம் கடன் பெற்று தருவதாகவும் தனக்கு முன்பணமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டார்.

அவர் கேட்டபடி விமலும் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அதன்பின்னர் ராணி ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 3 காசோலைகளை கொடுத்தார்.

அதை பெற்றுக் கொண்ட விமல் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தினார். ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமல் தொண்டு நிறுவன நிர்வாகியை சந்தித்து தனது பணத்தை திருப்பித்தர கேட்டார்.

ஆனால் ராணியிடம் இருந்து சரியான பதில் வராததால் அவர் மீது பண மோசடி செய்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!!
Next post வெள்ளகோவில் அருகே கணவருக்கு குடிப்பழக்கம்: புதுப்பெண் தற்கொலை!!