By 4 August 2014 0 Comments

மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!

7db7af66-39a9-4a83-a32c-1bf2026e7f05_S_secvpfதென்கிழக்கு டெல்லியில் வசிக்கும் கவ்ஷால் குமாருக்கு சில வாரங்களுக்கு டெலி மார்கெட்டிங் செய்யும் பெண்ணான நேகா என்பவர் செல்போன் அழைப்பு மூலம் சிம் கார்டு வேண்டுமா எனக்கேட்டுள்ளார். தனக்கு சிம் கார்டு வேண்டாம் என்று கவ்ஷால் கூறியவுடன் அவனது பழைய சிம் கார்டில் குறைவான கட்டணத்தில் பேசும் வசதி செய்து தரவா என்று அப்பெண் கேட்டுள்ளார். இப்படி ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் கவ்ஷால் அப்பெண்ணின் பெயரை கேட்க அவள் தனது பெயர் நேகா என்று கூறியுள்ளார்.

சிறிது நேர நட்பு ரீதியான பேச்சுக்கு பின் இருவரும் தொடர்பை துண்டித்துக்கொண்டனர். மறுநாள் காலை முதல் அந்த மோசக்கார பெண் தனது வேலையை காட்டினாள். கவுஷாலுக்கு போன் செய்த அவள் இன்றைய நாள் எப்படி போகிறது என்று கேட்டு தனது காதல் வலையை விரிக்க ஆரம்பித்தாள். அடுத்தடுத்த நாட்களில் தனது சொக்க வைக்கும் பேச்சால் வலையில் சிக்கிய மீனாக கவுஷாலை அப்பெண் விழவைக்க, செல்போனில் ஆரம்பித்த காதல் பேஸ்புக்கில் போட்டோக்களை மாற்றும் நிலைக்கு சென்றது. இருவரும் பார்க்காமலேயே காதலிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் கவுஷால் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நேகாவின் சகோதரி என்று கூறிக்கொண்டு 40 வயது மதிக்கத்தக்க ப்ரீத்தி என்ற பெண்மணி வந்துள்ளார். அவர் கவுஷால், தனது தங்கையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அதனால் அவள் தற்கொலைக்கு முயன்றதாகவும் மிரட்டியுள்ளார். அதோடு நில்லாமல் அவன் மீது ஓக்லா காவல் நிலையத்தில் புகாரும் அளித்துவிட்டார். காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இருவரும் சமாதானம் செய்துகொண்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டது.

அதன் பின் தான் கவுஷாலின் நிலை இன்னும் மோசமான நிலைக்கு சென்றது. கவுஷாலை சந்தித்த ப்ரீத்தி, அவன் மீது கற்பழிப்பு புகார் கொடுப்பதாக மிரட்டி, அவனது சம்பளப்பணம் முழுவதையும் பறித்துள்ளார். ஒரு கட்டத்தில் ப்ரீத்தியின் தொல்லை தாங்காமல் காவல்துறையின் துணை ஆணையரை சந்தித்து தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை கூறி அவர்களை உதவுமாறு கேட்டுள்ளான் கவுஷால். ஆனால் காவல்துறை அதிகாரியோ தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார்.

இந்த சூழலில் கடந்த புதன்கிழமையன்று தான் கவுஷாலுக்கு அதிர்ச்சியளிக்கும் உண்மை ஒன்று தெரியவந்தது. நேகாவும், பரீத்தியும் வெவ்வேறு நபர்கள் அல்ல என்றும் நேகா என்று அறிமுகப்படுத்தி தன்னை வகையாக சிக்கவைத்தது ப்ரீத்தி தான் என்பதை தெரிந்து அதிர்ந்து போன கவுஷால், இனி தன்னால் பணம் தரமுடியாது என கூறியுள்ளான். ஆனால் கவுஷாலின் அலுவலகதுக்கு சென்ற ப்ரீத்தி தனது மணிக்கட்டை வெட்டிக்கொள்ளப்போவதாக மிரட்டிவிட்டு சென்றாள்.

கடும் மன உளைச்சலுக்கு உள்ளான கவுஷால், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கடிதமாக எழுதிவைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கவுஷாலின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, மிகப்பெரிய கும்பல் ஒன்று டெலிமார்கெட்டிங் செய்வது போல் நடித்து, இளைஞர்களை தங்கள் வலையில் விழவைத்து பணம் பறிப்பதை கண்டுபிடித்தனர். அக்கும்பலை தீவிரமாக தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.Post a Comment

Protected by WP Anti Spam