ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி!!
தமிழில் நடிப்பதுதான் ஒரு பாடலுக்கு ஆடும் கடைசி குத்தாட்டம் என்றார் நர்கிஸ் பக்ரி. இந்தியில் ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் சஹாசம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவதற்காக சென்னை வந்தார். காரத்தில் காரத்தில் சில்லி இவ என்ற பாடலுக்கு ஹீரோ பிரசாந்த்துடன் குத்தாட்டம் போட்ட காட்சி படமாக்கப்பட்டது. பிறகு நர்கிஸ் கூறியது:
இப்படத்தில் நடனம் ஆட கேட்டு நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் என்னை அணுகியபோது மறுக்கவில்லை. தென்னிந்திய படங்களில் இதுதான் எனது அறிமுகம். குத்தாட்டத்துடன் கணக்கை ஆரம்பிப்பதில் சங்கடம் எதுவும் இல்லை. தென்னிந்திய திரையுலகம் பற்றி எனக்குதெரியாது.
இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹாலிவுட்டில் நடித்து வரும் ஸ்பை பட ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நடிகர் ஜூட் லாவுடன் நடிக்கிறேன். பட ரிலீசை எதிர்பார்த்திருக்கிறேன். எனக்கு நடனம் என்றால் கொள்ளைப்பிரியம். சாஹித் படத்தில் முதன்முறையாக ஆட கேட்டபோது ஒப்புக்கொண்டேன்.
அடுத்து சல்மான் கானின் கிக் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வந்தது. சல்மான் என்பதால் ஒப்புக்கொண்டேன். இனி இந்தியில் முழுநீள கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த உள்ளேன். இந்த குத்தாட்டம்தான் கடைசி. இவ்வாறு நர்கிஸ் பக்ரி கூறினார். –
Average Rating