செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்!!

Read Time:1 Minute, 57 Second

Untitled-2_522021 ஆம் ஆண்டில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­க­வுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் புதிய ரோவர் விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் ஒட்­சி­சனை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

எதிர்­கா­லத்தில் செவ்­வாய்க்­கி­ர­கத்­திற்கு மனி­தர்கள் செல்­வதை சாத்­தி­ய­மாக்கும் வகையில் அந்தக் கிர­கத்தில் 7 விஞ்­ஞான செயற்­றிட்­டங்­களை அந்த ரோவர் விண்­கலம் முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் செவ்வாய்க் கிர­கத்­தி­லான உயிர் வாழ்க்­கைக்­கான ஆதா­ரங்கள் குறித்து தீவிர ஆராய்ச்­சியை மேற்­கொள்­ள­வுள்­ளது.

இதபோது மேற்­படி விண்­கலம் செவ்வாய்க்கிர­கத்தில் செல்­வாக்குச் செலுத்தும் காப­னீ­ரொட்­சைட்டு வாயுவை ஒட்­சி­ச­னாக மாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்­ளது.

இது அங்கு மனி­தர்கள் வாழ்­வதை சாத்­தி­ய­மாக்­கு­வ­துடன் அக்­கி­ர­கத்­துக்கு பய­ணத்தை மேற்­கொள்ளும் ஏவு­க­ணைகள் மீளப் பூமிக்கு திரும்பும் நட­வ­டிக்­கைக்­காக எரி­பொ­ருளைப் பெறு­வ­தற்கும் வழி­வகை செய்யும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் அந்த ரோவர் விண்கலம் இரு புகைப்படக் கருவிகள், காலநிலை பரி சோதனை உபகரணம் என்பனவற்றை உள்ள டக்கியிருக்கும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரைப் பறித்த ‘செல்பி”!!
Next post இந்திய தேசியக் கொடி இடுப்பில்!!