எனக்கு அப்படி யாரும் இல்ல…!!

Read Time:1 Minute, 36 Second

hansikaதமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மொத்வானி. ஹன்சிகாவின் எதிர்காலத்தை அவருடைய மேனேஜர்கள்தான் தீர்மானிப்பதாக வெளியான செய்தியையடுத்து, ஹன்சிகா எனக்கு யாரும் மேனேஜர் இல்லை. என்னுடைய அம்மாதான் என்னுடைய கால்ஷீட் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார் என்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், மீண்டும் இவருடைய மேனேஜர் என்று சொல்லி சிலர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஹன்சிகாவுக்கு தகவல் போயுள்ளது. இதுகுறித்து ஹன்சிகா மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு சிலர் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் சம்பளம் பேசி வருவதாக திரையுலக நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு அப்படி யாரும் மேனேஜர் இல்லை. என்னுடைய அம்மா டாக்டர் மோனாதான் எனது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறார். ஆகவே, மோசடி நபர்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் கருமுட்டைகளை சேமித்து வைக்கும் திருமணமாகாத பெண்கள்!!
Next post திரிஷா யாருக்காக இரவு முழுவதும் தூங்கவில்லை?