ஜப்பானில் கருமுட்டைகளை சேமித்து வைக்கும் திருமணமாகாத பெண்கள்!!

Read Time:1 Minute, 33 Second

8f043dfe-c24a-47a1-aece-d5ec2d27b8c1_S_secvpfஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால் திருமணமாகாத கன்னிப்பெண்கள் ஏராளமானோர் கரு முட்டைகளை சேமிக்கின்றனர். ஜப்பானில் பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாக விஷயமாக உள்ளது.

ஜப்பான் பெண்கள் பெரும்பாலானோர் அதிக வயதான பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனாலும் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் போகிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கன்னிப்பெண்களும் போட்டி போட்டு கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.

சேமிப்பு மையங்களில் 10 கரு முட்டைகளை சேமித்து வைக்க ஜப்பான் பணத்தில் ஒரு வருடத்திற்கு 7 லட்சம் யென் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஆனாலும் பணம் செலவானாலும் பரவாயில்லை என பல பெண்களும் கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது சிறுமியை கடத்திய இராணுவ சிப்பாய் கைது!!
Next post எனக்கு அப்படி யாரும் இல்ல…!!