ஹாலிவுட் பட வாய்ப்பு: நயன்தாரா, அனுஷ்கா போட்டி?

Read Time:1 Minute, 58 Second

7a681eef-3471-4623-87ee-d4c55863c63e_S_secvpfஹாலிவுட் படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். சில்வஸ்டர் ஸ்டாலன், மெல்கிப்ஸன் ஆகியோரும் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகின்றனர்.

இந்திய நடிகைகளில் தமிழ் நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகின்றனர். நடிகையை தேர்வு செய்வதற்காக அடுத்த வருடம் படக்குழு இந்தியா வருகிறது. சென்னையிலும் மும்பையிலும் சுற்றுப் பயணம் செய்து நடிகையை தேர்வு செய்கின்றனர்.

கவர்ச்சியாகவும் சண்டை காட்சிகளில் நடிப்பவராகவும் இருப்பவரை பார்த்து தேர்வு செய்கிறார்கள். நயன்தாரா பில்லா படத்தில் இது போல் கலக்கி இருந்தார். அனுஷ்கா அருந்ததி படத்தில் வாள் சண்டை போட்டார். தற்போது நடித்து வரும் ருத்ரமாதேவி படத்திலும் ராணி வேடத்தில் குதிரை யேற்றம், வாள் சண்டை சாகசங்கள் செய்கிறார். ராய் லட்சுமி, நீது சந்திரா, ஸ்ரேயா போன்றோரும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளனர். ஆனாலும் அனுஷ்கா, நயன்தாரா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோழி இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல்!!
Next post குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது!!