மக்கள் தூக்கத்தை விட முக்கியத்துவம் கொடுப்பது எதற்குத் தெரியுமா?

Read Time:2 Minute, 30 Second

739090620Untitled-1இன்றைய நவீன யுகத்தில் மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலும் கையடக்கத் தொலைபேசிகளுடனும் கழிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அந்நாட்டு மக்கள் பொதுவாக அதிக நேரத்தை தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக் கணனி ஆகியவற்றில் கழிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

சாதாரணமாக, ஒரு இங்கிலாந்து சிறுவன் இது போன்ற நடவடிக்கைகளில் 11 மணி நேரம் 7 நிமிடத்தை கழிக்கிறான். கடந்த 2010ல் ஆய்வு செய்த போது இது 8 மணிநேரம் 48 நிமிடங்களாக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது. இங்கிலாந்து வாசிகளில் 61 சதவீத மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

மேலும் கணனி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. நவீன தொழில்நுட்ப யுகம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை கொண்டு வந்து சேர்த்த போதிலும் மக்களின் தனிப்பட்ட நேரத்தை அதிகமாக அது திருடிக் கொண்டுள்ளது தெரிகிறது.

பணி நேரத்திற்கு பிறகும் தங்களது வேலை தொடர்பான நடவடிக்கைகளில் 60 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். 10 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடியே மொபைலில் படிப்பது, வேலை தொடர்பான மெயில்களை பார்வையிடுவது, அனுப்புவது என ஈடுபடுகின்றனர். இதனால் ஒருவர் சுமார் 8 மணிநேரம் 41 நிமிடம் தூங்குகிறார் என்றால், அதை விட அதிகமாக 11 மணிநேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி மற்றும் கனணி இவற்றோடு செலவிடுகின்றனர்.

இதுகுறித்து ஆப்காம் என்ற நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள 2000 பேரிடமும், 800 குழந்தைகளிடமும் ஆய்வு நடத்தி இதை தெரிவித்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தார்த் – சமந்தா காதலில் விரிசலா?
Next post கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்த கணவன்!!