By 12 August 2014 0 Comments

“சவப்பெட்டி அரசியல் போதுமா”? -வடபுலத்தான்

tnpf‘நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம்’ எண்டு பாராளுமன்றத்தில் வீரச் சூளுரை உரைத்த மறத்தமிழ்ச் சிங்கன் கஜகஜகஜகஜ கஜேந்திரன் அஞ்சா நெஞ்சோடு யாழ்ப்பாணத்துத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் திரிகிறார். படையினரும் திரிகிறார்கள்.

இப்பிடி ரண்டு தரப்பும் சும்மா சாதாரணமாகத் திரியிறதைப்பாக்க எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கு. சிரிப்பாகவும் கிடக்கு.

ஏனெண்டால், நாற்பதினாயிரம் சவப்பெட்டியளை இன்னும் அனுப்பாமல், அதுக்கு நாள் பார்த்துக் கொண்டு ஒரு ஆள் திரியுது எண்டு இந்தப் படைகளுக்குத் தெரியாமல் இப்பிடிச் சாதாரணமாகத் திரியிறாங்களே…. பாவியள்! எண்டு நினைக்க சிரிப்புச் சிரிப்பாக வருது.

இப்பிடியொரு கணக்கைப்போட்டு, பாராளுமன்றத்தில எழும்பி உஷாராகக் கத்தி, வன்னியில இருந்த பெடியளையும் புலிகளையும் பிரபாகரனையும் உசுப்பேத்திப்போட்டு, அப்பிடியே விசா ஒஃபிசுக்குப்போய் நோர்வேக்கு பறந்த மறத்தமிழ்த்தம்பி… இப்ப பல்லுப்பிடுங்குப்பட்ட பாம்பாக ஒழுங்கைகளுக்குள்ள ஊர்ந்து கொண்டு திரியுது.

பிரபாகரன் தன்ரை வாழ்நாளில ஏமாந்தது எண்டால், அது இந்தக் கஜகஜகஜகஜ கஜேந்திரனிலயாகத்தானிருக்கும்.

‘சாய்… என்னமாதிரியப்பா, பிரபாகரனுக்குக் கிறீம் பூசின பணிசைத் தீத்தினான் பாவி’ எண்டு தடுப்பில இருந்த வந்த பெடியள் இந்த கஜகஜகஜகஜ கஜேந்திரனைப் பற்றிச் சொல்கிறாங்கள்.

எண்டாலும் மீசையில மண்படேல்ல எண்டமாதிரி ஆள் இன்னும் ‘பலே பொலிற்றிக்ஸ்’ செய்து கொண்டுதானிருக்கு.

அரசியல் எண்டால் நல்ல ருசியான சாமான் எல்லோ இந்த மாதிரி ஆக்களுக்கு.

பின்ன ஏனப்பிடி இருக்காது?

சும்மா இருக்கச் ‘சுவீப் ரிக்கற்’ விழுந்த மாதிரி, கூரையைப் பிரிச்சுக்கொண்டெல்லோ அதிர்ஷ்டத்தைக் குடுத்தது ‘வன்னித் தெய்வம்.’

போராட்டத்தில பங்கு பற்றாமல், சிறைக்கோ பங்கர் வெட்டவோ போகாமல், கட்சியொண்டிலயும் சேராமல், இயக்க வாடையே படாமல், ஒருநாள் கூட அகதி முகாம் அனுபவம் தெரியாமல், யுத்தத்தில சிக்காமல், யுத்தகாலத்திலயே – போராட்ட காலத்திலயே – தமிழ்த்தேசிய அரசியலைக் கையில எடுத்து, காலில செருப்பாக மாட்டி, மடிநிறையச் சம்பாதிச்சு, உலகமெல்லாம் சுத்தின சிங்கங்கள்தானே இந்தக் கஜகஜகஜகஜ கஜேந்திரனும் வீராங்கனை பத்மினி அக்காவும்…. வெட்டிப்பேச்சாளன் அரியநேத்திரனும் இன்னும் சில வால்களும்.

இதுக்கெல்லாம் எவ்வளவு கெட்டித்தனம் வேணும் எண்டு சொல்லுங்கோ பாப்பம்.

இதைப்போல நீளம்பாய்தல், உயரம்பாய்தல் எல்லாம் செய்யிறதுக்கு உங்களாலயோ என்னாலயோ முடியுமா?

இந்த நீளம்பாய்தல், உயரம்பாய்தல் விளையாட்டின்ரை உச்சக்கட்டமாகத்தான் கஜகஜகஜகஜ கஜேந்திரன் நாற்பதாயிரம் சவப்பெட்டிகளை தென்னிலங்கைக்க அனுப்பிறதாக அறிவிச்சார்.

கஜகஜகஜகஜ கஜேந்திரன்ரை இந்தப் ‘பேய்க்’ கதையை அறிஞ்சபோது வன்னியில இருந்த புலிகளின் தளபதிகள் சொல்லிச்சினமாம், ‘நாங்கள் ஆட்லறி, அஞ்சு இஞ்சி, இடியன், கரும்புலி எண்டு எல்லாத்தாக்குதலையும் செய்தாலும் நாற்பதாயிரம் பெட்டிக்கு அடுக்குப் பண்ணேலாது. இவன்பாவி வாயால இப்பிடி வெட்டிச்சரிக்கிறான்… அண்ணைக்கு (பிரபாகரனுக்கு) நல்லாத்தான் இடியப்பம் பிழியிறான்… ஒரு நாளைக்கு எங்கட கையில வளமாகச் சிக்கினால்… களம் எண்டால் எப்பிடியிருக்கும் எண்டு காட்டுவம்… அப்ப தெரியும் மச்சானுக்கு கதைவிடுகிறதுக்கும் ஒரு அளவிருக்கெண்டு….’ எண்டு.

எண்டாலும் கஜகஜகஜகஜ கஜேந்திரன்ரை பக்கத்தில இன்னும் அதிர்ஷ்டக்காத்து வீசிக்கொண்டுதானிக்கு.

கஜகஜகஜகஜ கஜேந்திரனையும் பத்மினி, அரியநேத்திரன் கோஷ்டியையும் அரசியல் அரங்கில் ஏற்றிய புலிகளான புலிகளே இல்லாமற் போயிட்டினம்.

ஆனால், புலிகளால அரங்கேற்றின இவை மட்டும் நிண்டுகொண்டு சதிராடுகினம்.

அனுபவிச்ச நாக்குச் சும்மா கிடவாது எண்டமாதிரி, அரசியல் ருசி சும்மா இருக்க விடாது.

அதால, கஜகஜகஜகஜ கஜேந்திரன் மெல்ல மெல்ல சின்னச் சின்ன அளவில கூட்டங்கள் போடுறதும் நாலு பெடியளை வைச்சு ஆர்ப்பாட்டம் செய்யிறதும் ஒரு சின்ன ஸ்பீக்கரை வைச்சுக்கொண்டு சத்தம் போடுகிறதுமாக அரசியற்போராளியாகத் தோற்றம் காட்டுகிறார்.

ஆள் கட்டையெண்டாலும் காரியகாரன் எல்லோ… கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்ரை காசில (உடையாற்றை திருவிழாவில சடையர் வாணம் விட்டமாதிரி) கஜகஜகஜகஜ கஜேந்திரன் கொடியேற்றுறார், புரட்சி செய்து பார்க்கிறார்.

நாற்பதினாயிரம் சவப்பெட்டிக்கதையை இவர் சிலவேளை மறந்தாலும் சனங்கள் மறக்க மாட்டுதுகள்.

ஏனெண்டால், இந்தக் கதையைக்கேட்டுக்கொண்டு போய் மாண்ட பிள்ளைகளின்ரை தாய் தகப்பன்ரை நினைவில இதெல்லாம் ஆணி அடிச்சமாதிரிப் பதிஞ்சு போயிருக்கெல்லோ…!Post a Comment

Protected by WP Anti Spam