கோபியில் கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி!!

Read Time:1 Minute, 35 Second

2e753463-cbb2-4d7f-9692-1be97badf755_S_secvpfகோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கான கபடி போட்டி கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.

கல்லூரி செயலாளர் பி.என்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெகதா லட்சு மணன் வரவேற்றார். மாவட்ட கபடி அசோசியேசன் செயலாளர் என்.கே.கே.பி.சத்யன் போட்டியை தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட அதெலடிக் அசோசியேசன் செயலாளர் எம். கோவிந்தராஜன் கலந்து கொண்டார்.

இன்று 14 கல்லூரிகளை சேர்ந்த 200 மாணவிகள் கபடி போட்டியில் பங்கேற்று ஆடினர்.

இன்று நடைபெறும் போட்டியில் ஈரோடு கலை கல்லூரி, கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி, கோபி கலை கல்லூரி, அய்யன் திருவள்ளுவர் கல்லூரி , அந்தியூர் ஆதர்ஷ் கல்லூரி, தாராபுரம் பிஷப் கல்லூரி, கோவை அரசு கலை கல்லூரி உள்பட 14 அணிகள் இன்று மோதுகின்றன.

நாளையும் (புதன்கிழமை) போட்டி தொடர்ந்து நடக்கிறது. நாளை மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை: ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!!
Next post பெரம்பலூர்: கள்ளக்காதலியை கொன்று 12 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது!!