முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் சீன உணவகம்!!

Read Time:2 Minute, 38 Second

f3fa549d-2b22-43b1-8019-10e3834f09e4_S_secvpfசீனாவில் தொழிலாளர் செலவினங்கள் அதிகரித்துவருவதால் உற்பத்தியாளர்களை தானியங்கி ரோபோ செயல்பாட்டை அதிகரிக்கத் தூண்டியது. இந்த நிலையானது கடந்த வருடம் தொழில்துறையில் அதிக அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்தியதில் ஜப்பானைவிட சீனாவை முன்னிலையில் இருத்தியது. இந்த முன்னேற்றத்தின் வெளிப்பாடாக கடந்த வாரம் சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் உள்ள குன்ஷன் நகரத்தில் தொடங்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படுகின்றது.

உணவகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு ரோபோக்கள் வணக்கம் கூறி வாடிக்கையாளர்களை வரவேற்க, நான்கு ரோபோக்கள் உணவு பரிமாற, சாப்பிட்ட இடத்தினை சுத்தம் செய்யும் பணியினைக் கவனிக்கின்றன. சமையலறையில் இரண்டு பெரிய ரோபோக்கள் அனைத்து உணவுகளையும் திறம்படத் தயாரிக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு வரும் மக்களுக்கு இந்த ரோபோக்களின் நடவடிக்கைகள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

கடந்த 2012ல் அந்நாட்டின் வடகிழக்கு நகரமான ஹர்பினில் தொடங்கப்பட்ட ஒரு உணவகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தான் இதனைத் தொடங்கியதாக இந்த உணவகத்தின் உரிமையாளர் சோங் யுகங் தெரிவித்தார். ஒவ்வொரு ரோபோவும் 40,000 யுவான் விற்பனை விலை கொண்டவை என்ற யுகங், தினசரி உபயோகப்படுத்தும் 40 வாக்கியங்களை இவை புரிந்துகொள்ளும். உடல்நலக் குறைவோ, விடுமுறைக்கான அவசியமோ இவற்றுக்கு ஏற்படாது. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் வேலை செய்யும் திறன் கொண்டவை இவை என்று கூறினார்.

தன் மகளுக்கு வீட்டுவேலைகள் செய்யப் பிடிக்காது என்பதால் இவ்வாறான ஒரு திட்டத்தை செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியலூர் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!!
Next post தவறுதலாக 200 நோயாளிகளை இறந்தவர்களாக அறிவித்த ஆஸ்திரேலிய மருத்துவமனை!!