காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம் ?

Read Time:4 Minute, 23 Second

loversகோபப்படுபவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதிலும் தாம் ஒரு தவறு செய்து, அதனால் காதலி கோபப்படுவதை சமாதானப் படுத்துவது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு அழகான உறவுக்குள் சின்ன சின்ன சண்டை வருகிறது என்றால் அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால் சண்டை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும். இல்லையெனில் அந்த ஆரோக்கியமான வாழ்க்கை கசப்பானதாகிவிடும். அப்படி காதலி ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், சற்று பொறுமையாக இருந்து அவளை சமாதானப்படுத்த வேண்டும். அப்படி அவளை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ ஒரு சில வரிகளை சொல்லத் தான் வேண்டும்.

1. ‘தயவுசெய்து, என்னை மன்னித்துவிடு’ என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையும் கூட. நீங்கள் தவறு செய்து அதை ஒப்புக்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்துவிடுவாள்.

2. ‘நடந்ததை மறந்துவிடு’ என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லும் முன் முதலில் நீங்கள் சண்டை போடும் எண்ணத்தில் இல்லாமல், சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். பின் காதலியிடம், நடந்ததை நினைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை தான் கெட்டு போகும். ஆகவே நடந்ததை மறந்துவிடு என்று சொல்ல வேண்டும். முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை என்றால், ஒரு மெசேஜ் அனுப்பலாம். அப்படி மெசேஜ் அனுப்பும் போது, அதில் ஒரு சிரித்த படி ஒரு சிம்பிள் போட்டு அனுப்பலாம். இதனால் காதலியின் கோபமானது சற்று நேரத்தில் சென்று விடும்.

3. ‘சரி! இனிமேல் செய்ய மாட்டேன், நினைவில் வைத்துக் கொள்கிறேன்’ என்று செல்லுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், தள்ளிப் போடாமல் உடனே இதனை சொல்லிவிடுங்கள். அப்படி சொல்லாமல் லேட் செய்தால், ரப்பர் பேண்ட் மாதிரி தான் சண்டை இழுத்துக் கொண்டே போகும். சின்ன சண்டை என்றால் இதைச் சொல்லி காதலியை சமாதானப்படுத்தலாம். இப்படி சொல்லும் போது இதில் ஒரு உணர்ச்சி தெரிய வேண்டும், அது தான் முக்கியம். ஆனால் தவறை காதலி செய்தால், நீங்கள் இதை சொல்லக் கூடாது, இல்லையென்றால் அவர்கள் என்ன செய்தாலும்,நீங்கள் அவர்களுக்கு கட்டுப்படுவது போல் இருக்கும்.

4. ‘நீ கோபத்துல கூட அழகா இருக்க‘ என்று சொல்லலாம். மேல சொன்ன மூன்று வரிகளை விட இதுவே மிகவும் பவர்ஃபுல் வரி. இதனால் அவர்கள் விரைவில் குளிர்ந்து விடுவர். இந்த வார்த்தைகளை மெதுவாக அவர்கள் கைகளை பிடித்து, காதுக்கு அருகில் சென்று சொன்னால், அந்த நொடியே அவர்கள் கரைந்து விடுவர். அதுவும் இப்படி சொன்னதும் அவர்கள் முகத்தை பார்த்தால் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள்.

என்ன, இப்படியெல்லாம் சொல்லி கோபப்படுற உங்க காதலியை சாமாதானப்படுத்த ரெடியா இருக்கீங்களா!!! இப்ப இந்த நான்கு பவர்ஃபுல் வரியில் எதை நீங்க சொல்லி சமாதானப்படுத்தப் போறீங்க?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீன்பிடிக்க வந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!!
Next post மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?