இரும்பு குதிரை ரிலீஸ்?

Read Time:2 Minute, 0 Second

Irumbu-Kuthirai1பரதேசி படத்திற்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளார்கள். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அதர்வா பைக் ரேஸ் ஓட்டுபவராக வருகிறார்.

இரும்பு குதிரை படத்தை சென்சார் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் பார்க்க உள்ளனர். அதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் திகதி அதாவது பண்டிகை நாளான விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70 வயது பெண்ணை கொடுமைப்படுத்திய இலங்கை பெண் சார்ஜாவில் கைது!!
Next post காதலனை கொன்றவர்களை தண்டிக்க வேண்டும்: இளம்பெண் கதறல்!!