பெண்ணை தூக்கிச்சென்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: திருப்பூர் கோர்ட்டு அதிரடி!!

Read Time:2 Minute, 32 Second

485aa98a-2e96-45cb-8595-b712d859e043_S_secvpfதிருப்பூர் மாவட்டம் தளி வல்லகுண்டபுரத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 28). இவர் கடந்த 29.4.13 அன்று தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் லோகமுருகன் (29). இவர் தோட்டத்தில் தனியே வேலை செய்து கொண்டிருந்த தனலட்சுமியை வலுக்கட்டாயமாக தூக்கி கொண்டு அருகில் உள்ள வாழைத்தோப்புக்குள் சென்றார்.

லோகமுருகன் பாலியல் உறவுக்கு முயன்றபோது தனலட்சுமி அவரை தள்ளி விட்டு வாழைத்தோப்புக்குள் இருந்து வெளியே வந்து காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று சத்தம்போட்டார்.

அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்த விவசாய கூலித் தொழிலாளிகள் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை கண்ட லோகமுருகன் அங்கிருந்து தப்பி ஓடினார். கூலித் தொழிலாளிகளிடம் நடந்தவற்றை தனலட்சுமி கூறினார். இதனைத்தொடர்ந்து தனலட்சுமி தளி போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். திருப்பூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. லோகமுருகன் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று (19–ந் தேதி) பெண்ணை மானபங்கபடுத்தியதற்காக லோகநாதனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் பெற வேணடும் என்று மகளிர் கோர்ட்டு நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து லோகமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை முறைப்படியும், விரைவாகவும் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த உடுமலை மகளிர் போலீசாரை மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் பாராட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எப்படியான ஆண்களை காதலிக்கலாம் ?
Next post பாரிமுனையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை!!