சிம்புவு + ஆண்ட்ரியா = ?????

Read Time:1 Minute, 46 Second

simbu_andreaதற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்க்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பிளாஸ்பேக் காட்சியில் சிம்புவுக்கு ஜோடியாக டாப்சி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது டாப்சிக்கு பதிலாக ஆண்ட்ரியா நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இதற்குமுன் ஆண்ட்ரியா-சிம்பு இருவரும் ஜோடியாக ‘இங்க என்ன சொல்லுது’ என்ற படத்தில் நடித்தார்கள். இப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால், இது நம்ம ஆளு படத்திலும் ஆண்ட்ரியாவையே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலையை விட பெரிய கைகளால் அவதிப்படும் சிறுவன்!!
Next post கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு!!