ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்?

Read Time:6 Minute, 4 Second

530379271nithyகர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், அவர் மீது பிடதி பொலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராம்நகர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் பெங்களூர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

ஆனால் அதற்குப்பின் அவர் ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து ராம்நகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நித்யானந்தா மீது ஜாமீனில் வெளிவரமுடியாத ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவில், கடந்த 6-ந் திகதி ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா உட்படவேண்டும், மறுநாள் (7-ந் திகதி) ராம்நகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறியது.

இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆண்மை பரிசோதனைக்கு இடைக்கால தடை விதித்து, 18-ந் தேதி ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி நித்யானந்தா ராமநகர் கோர்ட்டில் ஆஜரானார். விசாரணை வருகிற 23-ந் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.

நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் மோகன் பராசரன் வாதிடுகையில், “இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது நித்யானந்தாவுக்கு அவருடைய தரப்பு வாதங்களை முன்வைக்க உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அந்த விசாரணை மிகவும் அவசர அவசரமாக நடத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, நித்யானந்தாவுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பெங்களூர் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும்” என்றார்.

நடிகை ரஞ்சிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்த வழக்கினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். என்னை தொடர்புபடுத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய காட்சிகள் அனைத்தும் செயற்கையாக புனையப்பட்டவை. அந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். என் மீதும், நித்யானந்தா மீதும் வீண் பழி சுமத்தப்பட்டது. என்னையும் இந்த வழக்கு தொடர்பான மனுதாரர்களில் ஒருவராக சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று நடிகை ரஞ்சிதாவும் சுப்ரீம் கோர்ட்டின் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்தார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என்.ராவ், வாதாடுகையில், ‘நித்யானந்தா தரப்பில் வைக்கப்படும் வாதங்களுக்கு முகாந்திரம் ஏதுமில்லை. எந்த உண்மையும் கிடையாது. நீதிமன்றத்தையும், விசாரணைகளையும் தவிர்க்கும் வகையிலேயே நித்யானந்தா தொடர்ந்து செயல்படுகிறார். அவர் மீது தவறு இல்லை என்றால் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்கலாமே. எதற்காக புதிய மனுக்களை தாக்கல் செய்து வழக்கை திசை திருப்ப வேண்டும்’ என்றார்.

அப்போது, நீதிபதிகள், ‘நாளுக்கு நாள் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற பரிசோதனைகள் (ஆண்மை பரிசோதனை) அவசியமான ஒன்று. யாரும் (குற்றவாளி) இதுபோன்ற பரிசோதனையை தவிர்க்கக் கூடாது. இந்த பரிசோதனையைக் கண்டு நீங்கள் பயப்படுவது ஏன்? நீங்கள் பரிசோதனைக்கு மறுப்பதால் உங்களைப் (நித்யானந்தா) பற்றி பல்வேறு வகையான ஊகங்கள் வெளிவரக்கூடும்’ என்றனர்.

இந்த வழக்கின் மீதான வாதங்கள் இன்றும் தொடரும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு!!
Next post சுந்தராபுரம் அருகே 10 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!!