அஞ்சானுக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சம் இதுதான்!

Read Time:2 Minute, 35 Second

Lakshmi-menon-thulasi-nair-karthika-nair9அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் இலாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மத்திய சினிமா தணிக்கை வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோரை கடந்த 14ம் திகதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க இலஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமார் கடந்த 18ம் திகதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரித்து வந்தனர். வெள்ளிக்கிழமையன்று அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதிகள் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம் தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் 6 நாட்கள் இருப்பில் வைத்து அதன்பின்னர்தான் அந்த படத்தை பார்த்துள்ளனர். இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த 5ஆம் திகதி அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.

‘அஞ்சான்’ படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேட் இலஞ்சமாக வாங்கி இருக்கிறார்.

இது தவிர கடந்த 9ஆம் திகதி ‘சிக்கந்தர்’ என்ற தெலுங்கு படத்துக்கு சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் இலஞ்சம் பெற்று இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுக்கடைகளுக்கு முகத்தை மறைத்து சென்று மதுவாங்கும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க கொ.ஜ.க.கோரிக்கை!!
Next post வீட்டில் உள்ள மின்இணைப்பு தொடர்பாக தகராறு: அண்ணி காதை கடித்து துப்பிய வாலிபர்!!