சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!

Read Time:2 Minute, 37 Second

01bb9ba9-d68a-4658-adc7-a735daac86a7_S_secvpfசென்னை ஆவடியில் வசித்து வருபவர் 50 வயது விதவையான சுந்தரி. இவரது 18 வயது மகனான பாஸ்கரன் என்பவர் டாமி என்ற நாயை வளர்த்துவந்தார்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று அதிவேகமாக வண்டி ஓட்டிய அவர் விபத்தில் சிக்கி பலியானார். பலியான பாஸ்கரனின் உடல் ஆவடி பாலத்திற்கு கீழ் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. தனது முதலாளியான பாஸ்கரன் புதைக்கப்பட்ட இடத்தை இரவு முழுவதும் சுற்றி வந்த நன்றியுள்ள நாயான டாமி, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறுநாள் காலை வரை சமாதியிலேயே உணவு கூட சாப்பிடாமல் படுத்துக் கிடந்தது.

இதை பார்த்த ப்ளு கிராஸ் அமைப்பின் பொது மேலாளரான டான் வில்லியம்ஸ் தலைமையிலான குழுவினர் நாயை காப்பாற்ற முயற்சித்த போது அது பாஸ்கரனின் சமாதியை விட்டு நகர மறுத்துள்ளது. பின்னர் அவர்கள் பாஸ்கரனின் தாயான சுந்தரி வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். அப்போது டாமியை பற்றி அவர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் அளித்த சுந்தரி தனது மகன் ஐந்து வருடமாக டாமியை வளர்த்து வந்ததாக கண்ணீருடன் கூறினார். மகன் இறந்தவுடன் டாமி காணாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் டாமி சுடுகாட்டில் இருப்பதாக கூறிய வில்லியம்ஸ் குழுவினர் சுந்தரியை அங்கு அழைத்து வந்தனர். சுந்தரியை எதிரில் பார்தத டாமி ஒடி வந்து அவரது காலை தழுவியது. இதைப் பார்த்த சுந்தரி டாமியின் கழுத்தை பிடித்து தூக்கியபடி கண்ணீர் சிந்தினார். இதை பார்த்த ப்ளு கிராஸ் அமைப்பினரின் கண்களும் குளமாகின. அதன் பின் டாமியை தனது வீட்டிற்கு சுந்தரி அழைத்து வந்தார். பிறப்பால் நாயாக இருந்தாலும் விசுவாசத்தில் மனிதனை விட மேலாக நடந்த டாமியை பார்த்து நமக்கும் கண்ணீர் தான் வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!!
Next post திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!