By 28 August 2014 0 Comments

2 மனைவிகளால் குடும்பத்தகராறு: தற்கொலை முயற்சியில் தீயில் கருகிய போலீஸ் தம்பதி!!

7a4b7bfa-6e5e-4404-aa53-00f26fe21a58_S_secvpfதிருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சேகர் (வயது 44). இவரது முதல் மனைவி மகேஷ்வரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் விஜயலெட்சுமி (35) என்பவரை 2–வதாக சேகர் திருமணம் செய்து கொண்டார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி மகேஷ்வரியை மேல கல்கண்டார் கோட்டையிலும், 2–வது மனைவி விஜயலெட்சுமியை கொட்டப்பட்டிலும் குடியமர்த்தி 2 பேருடனும் சேகர் குடும்பம் நடத்தி வந்தார்.

சமீப காலமாகவே சேகருக்கும், விஜயலெட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று அதிகாலையிலும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

இதில் மிகவும் மனம் உடைந்த விஜயலெட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் மள மளவென தீ பரவி எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது சேகர் மீதும் தீப்பிடித்துள்ளது.

தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்த அவர்கள் சத்தம் கேட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த சேகரின் மகன், மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இருவரின் உடலிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் பொன்மலை போலீசாருக்கும் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

திருச்சியில் இன்று அதிகாலை பெண்போலீஸ் தீக்குளித்ததும், அவரை காப்பாற்ற சென்ற போலீஸ்காரரும் தீயில் கருகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam