பெண்ணை கடத்தி கொன்று கிணற்றில் பிணம் வீச்சு: டிரைவர்–கண்டக்டர்கள் 4 பேர் சிக்கினர்!!

Read Time:5 Minute, 17 Second

90fd95cd-ed96-4d1a-84c8-988b7da9ba02_S_secvpfகோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன் புதூரில் சந்திர சேகர் என் பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இங்குள்ள கிணற்றில் கடந்த 23–ந் தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலமாக மிதந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்று மேட்டில் கிடந்த பையில் பைபிள் மற்றும் துணிகள் இருந்தன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் பல்லடம் வதம்பச்சேரியை சேர்ந்த லிங்க மூர்த்தி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காணவில்லை என்று பல்லடம் போலீசில் புகார் செய்திருந்தது சூலூர் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே பிணமாக கிடந்தது சவுந்தர்யாவாக இருக்கலாம் என்று சூலூர் போலீசார் சந்தேகித்தனர்.

எனவே அவர்கள் லிங்க மூர்த்திக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவரிடம் கிணற்றில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலை காண்பித்தனர். அப்போது அந்த உடல் சவுந்தர்யாவின் உடல் என்பது தெரியவந்தது. சவுந்தர்யா எப்படி இறந்தார்? என்பது மர்மமாக இருந்தது. ஒரு வேளை அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாமா? அல்லது தற்கொலை செய்திருக்க லாமா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

அப்போது சவுந்தர்யாவை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் பிணத்தை வீசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்று கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

சவுந்தர்யா மத பிரசாரம் செய்து வந்தார்.கடந்த 17–ந் தேதி பல்லத்தில் இருந்து சேலத்துக்கு மத பிரசாரத்துக்கு சென்றார். பின்னர் சேலத்தில் இருந்து கோவைக்கும் தொடர்ந்து கோவையிலிருந்து பல்லடத்துக்கும் பஸ்சில் வந்துள்ளார். அதுவரை தனது தந்தையிடம் தொடர்பு கொண்டு பேசிய படி இருந்துள்ளார். அதன் பின்னர்தான் அவர் மாயமானார்.

எனவே அவர் வந்த பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் விசாரித்தால் தகவல் கிடைக்கும் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கோவையில் இருந்து பல்லடத்துக்கு சவுந்தர்யா வந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அந்த டிரைவரும் கண்டக்டரும் சவுந்தர்யா கொலையுண்டது பற்றி சரியான தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் ‘‘சவுந்தர்யா எங்கள் பஸ்சில் வந்து காரணம்பேட்டையில் இறங்குவார். பின்னர் சத்தியமங்கலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் பஸ்சில் செல்வது வழக்கம்’’ என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சத்திய மங்கலம் பஸ்சின் டிரைவர், கண்டக்டரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடமும் விசாரணை நடந்தது. இந்த 4 பேரில் ஒரு கண்டக்டரிடம் சவுந்தர்யாவுக்கு நெருங்கிய நட்பு இருந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரித்தபோது ஒரு முறை சவுந்தர்யாவை கொலை செய்ததாகவும் பின்னர் மாற்றி மாற்றி பேசுவதாகவும் தெரிகிறது.

எனவே அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் அவருக்கு மற்ற 3 பேரும் உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சவுந்தர்யா மத பிரசாரத்தில் ஈடுபடுவது பிடிக்காமல் அவரை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றும் விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர் கண்ணெதிரே 16 வயது பெண் சுட்டுக்கொலை: ஒன்பது முறை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்!!
Next post கல்வீசி தாக்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு முத்தமிட முயன்ற வாலிபர்!!