40 ஆண்டுகளுக்கு முன் கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 75 வயதில் ஆயுள் தண்டனை!!

Read Time:1 Minute, 55 Second

5af203fa-abb2-41b9-a22e-33ea3aacc85b_S_secvpfஅமெரிக்காவின் மிஸவ்ரி மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி வ்யோமிங் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1975-ம் ஆண்டு செய்யேன் பகுதியில் வசித்துவந்த போது தனது 25 வயது கணவனை சுட்டுக் கொன்ற இவர், அட்டை பெட்டியில் பிரேதத்தை கிடத்தி, ஒரு சுரங்கத்தின் அருகே வீசி விட்டு, ஏதும் தெரியாதவர் போல் இருந்து விட்டுள்ளார். எப்படியோ, இந்த வழக்கில் மோப்பம் பிடித்துவிட்ட அமெரிக்க போலீசார் தற்போது 75 வயதாகும் அலைஸ் என்ற மூதாட்டியை கைது செய்து வ்யோமிங் மாநில கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வீட்டில் அழுதுக் கொண்டிருந்த 2 வயது மகளை கொல்வதற்காக கணவன் பாய்ந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அந்த கொலையை செய்து விட்டேன் என்று அவர் அளித்த வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் தயாராக இல்லை.

தற்போது நான்காவது கணவரான உடென் என்பவருடன் அலெஸ் வாழ்ந்து வருகிறார். இந்த உடென் தனது முதல் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற வழக்கை சந்தித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதுமான சாட்சியங்களுடன் குற்றம் நிரூபணம் ஆனதால் அலெஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரக் கொலை!!
Next post ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு!!