நாங்கள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமா?
தமிழ் படங்கள் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றே திரைக்கதையும் உருவாக்கப்படுகிறது. கதாநாயகிகள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களின் கேரக்டர்கள் வலுவாக சித்தரிக்கப்படுவது இல்லை.
ஆனால் இந்தி, தெலுங்கு திரையுலகில் கதாநாயகிகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். டர்டி பிக்சர், கஹானி, இளதி படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாய் வந்தன. இப்படங்களில் நடித்த வித்யாபாலன் விருதுகள் பெற்றார்.
தெலுங்கில் அனுஷ்கா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறார். நயன்தாராவும் தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார். தமிழில் அதுபோல் படங்கள் வருவது இல்லை.
இதுகுறித்து ப்ரியா ஆனந்த் கூறும்போது, தமிழ் படங்களில் பொதுவாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்றார். கதாநாயகியாக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா விழாக்களிலும் பந்தாவாக இருக்க எனக்கு தெரியாது. சினிமாவில் நடிப்பேன். வெளியில் எனக்கு நடிக்க தெரியாது என்றும் அவர் கூறினார்.
Average Rating