மதுபான விளம்பரத்திற்காக விலைபோன நகரம்!!

Read Time:1 Minute, 55 Second

'மதுபான விளம்பரத்திற்காக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள க்ரெஸ்டட் பட் என்ற நகரத்தையே வாடகைக்கு எடுத்துள்ளது அமெரிக்காவில் உள்ள பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம்.

குறித்த நிறுவனம் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விளம்பரம் செய்ய நினைத்தது.

அதற்காக க்ரெஸ்டட் பட் நகரத்தைத் தேர்வு செய்தது. இங்கு இந்த‌ வார இறுதியில் மதுபான விளம்பரக் காட்சி தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்த விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக, இந்நகர நிர்வாகத்துக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் கட்டணமாக வழங்கப்பட்டுள்ளன.

நிர்வாகத்துக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் இரகசியமாக நடந்துள்ளது.

விளம்பரத்திற்கு ஏற்றாற் போல ஆங்காங்கே ´செட்´களும் போடப்பட்டுள்ளன. தவிர, க்ரெஸ்டட் பட் எனும் பெயர் விளம்பரத்துக்காக ´வாட் எவர் யு.எஸ்.ஏ.´ என்று மாற்றப்பட இருக்கிறது.

விளம்பரத்திற்காக வெளி நகரங்களில் இருந்து சுமார் 1,000 இளைஞர்களை இந்நகரத்துக்கு வரவழைத்துள்ளது அந்நிறுவனம்.

இதன் மூலம் இந்நகரத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், வருமானம் வளரும் என்று நிர்வாகம் சாக்குப்போக்குகள் சொன்னாலும், இந்த விளம்பர ஒப்பந்தம் கேவலமானது என்று நகர மக்கள் துப்புகிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் தகராறில் கொலை: கொலையாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!
Next post அமர காவியம் (விமர்சனம்)!!