நடிப்புக்கு சமந்தா எப்போது விடை கொடுப்பார் தெரியுமா?
Read Time:1 Minute, 23 Second
தற்போது தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், “சில நேரங்களில் எனக்கும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்போது என்னுடைய நலம் விரும்பிகள் நான் விலக நினைத்தாலும் எனக்கு ஆதரவாக இருந்து மாற்றி விடுவார்கள்.
பணத்துக்காக நடிப்பதை நான் என்றுமே விரும்பியதில்லை. எனக்கு வாய்ப்புகள் குறையும் போது நான் திரையுலகை விட்டு விலக மாட்டேன். முன்னணியில் பிஸியாக இருக்கும் போதே திரையுலகை விட்டு விடுவேன்,” என்று கூறியிருக்கிறார்.
“உடலையும், முகத்தையும் அழகாக்கிக் கொள்வதை விட மனதளவில் நம்மை வலிமையானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினம் தினம் பல்வேறு விதமான எண்ணம் கொண்ட ஆயிரக் கணக்கானவர்களைச் சந்திக்கிறோம். அதனால், மனதளவில் நம்மை வலிமையானவர்களாக வைத்துக் கொண்டால் நல்லது,” என்றும் கூறுகிறார்.
Average Rating