கத்திக்கு பிறகு அடுத்த படம் எது தெரியுமா?

Read Time:1 Minute, 35 Second

vijay-neவிஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் 57-வது படமாகும். இதைத்தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜோடியாக நடிக்கவுள்ளனர். ‘நான் ஈ’ வில்லன் சுதீப், ஸ்ரீதேவி கபூர் ஆகியோர் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

விஜய்யின் 58-வது உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கவிருக்கின்றனர். இப்படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காடு, மலைகளில் எடுக்கவிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை நட்டி நடராஜ் கவனிக்கவிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

‘நான் ஈ’, ‘மாவீரன்’ ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட குழு இப்படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டத்துடன் உருவாகவிருக்கும் இப்படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்ட இளம்பெண்!!
Next post காஜல் அகர்வால் 40 லட்சம் நிதி மோசடி?