முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இலங்கையர்!!

Read Time:1 Minute, 35 Second

1876645073Untitled-1இந்தியாவைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை, அவரது உறவினர்களுக்கு அனுப்பியதோடு, 10ஆயிரம் தினார் பணம் கேட்டு மிரட்டிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னுடனான உறவை முறித்துக் கொண்டதன் பின்னர், குறித்த இலங்கை நபரின் தொலைபேசியில் இருந்து தமது புகைப்படங்களை அழித்து விடுமாறும், இந்த விடயம் குறித்த தனது பெற்றோருக்கு கூறவேண்டாம் எனக் கோரியும் அந்த இந்தியப் பெண், 2000 தினாரை வழங்கியுள்ளார்.

எனினும் 10ஆயிரம் தினார் தரவேண்டும் என்று கோரிய குறித்த பயிற்சியாளர், முன்னாள் காதலியின் ஏழு நிர்வாணப் படங்களை அவருடைய சகோதரி மற்றும் உறவினர் ஒருவருக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது தொலைபேசியில் இருந்த அந்த நிர்வாணப் படங்களை பேஸ்புக் ஊடாக காதலியின் உறவினர்களுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து இந்திய பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை பயிற்சியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்லியாக நடிக்கும் ஷகிலா!!
Next post மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதி சுற்றிவளைப்பு:இருவர் கைது!!