களைகட்டும் எமி – த்ரிஷா உறவு…!!

Read Time:1 Minute, 51 Second

andtri‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் இவர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் எமி வெளிநாட்டு பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்திலும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

தற்போது எமி ஜாக்சன், சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமீபத்தில் எமி ஜாக்சன் அளித்த பேட்டியில், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவருடைய நடிப்பு தான் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது என்று கூறியிருந்தார்.

அதற்கு திரிஷா டுவிட்டரில், பேட்டியில் என்னைப் பற்றி பேசியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பெரியளவில் உருவாகியிருக்கும் ஐ படத்திற்கு வாழ்த்துக்களையும் இப்படத்தில் பார்ப்பதற்கு முற்றிலும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!
Next post 10 நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!