திரிஷாவுக்கு 1,000,000 ரசிகர்கள்!!

Read Time:1 Minute, 21 Second

trishaதிரிஷா டுவிட்டரில் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு ரசிகர்கள் இல்லை என்கின்றனர். டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் திரிஷா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவேதான் அவருக்கு கணிசமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

திரிஷா 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கிறார். தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இது சாதனையாக கருதப்படுகிறது. 2002–ல் கதாநாயகியாக அறிமுகமான அவர், கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார். மேலும், 2 தமிழ் படங்களுக்கும், ஒரு தெலுங்கு படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: இளம்பெண் புகார்!!
Next post அழகுன்னா நயன் – நடிப்புன்னா திரிஷா!!