திருப்பதி கோவில் விடுதியில் காஞ்சீபுரம் பக்தர் கொலையா?: அழுகிய நிலையில் பிணம்!!

Read Time:1 Minute, 18 Second

e15b33c7-33bc-42ee-920f-cde4ec751aa2_S_secvpfதிருப்பதி கோவில் பிரமோற்சவம் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

திருமலையில் உள்ள சப்தகிரி சத்திரத்தில் உள்ள 420 எண் கொண்ட அறையில் 2 பேர் தங்கினார்கள். 23–ந் தேதி இரவு இருவரும் அறை எடுத்து தங்கினார்கள். மறுநாள் அவர்கள் அறையை காலி செய்ய வேண்டும்.

ஆனால், நேற்று வரை காலி செய்யவில்லை. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே கோவில் ஊழியர் போலீசார் உதவியுடன் சென்று பார்த்தனர். அங்கே ஒருவர் பிணமாக கிடந்தார்.

அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. விசாரணையில் இறந்து போனவர் பெயர் சுப்பிர மணி என்றும் காஞ்சீ புரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவருடன் தங்கியவர் பற்றிய விவரம் தெரியவில்லை. சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷில்பா ஷெட்டியின் கார் விபத்து!!
Next post நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சீனாவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!