பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தியதால் நடிகை எம்மா வட்ஸனுக்கு அச்சுறுத்தல்!!

Read Time:3 Minute, 11 Second

708615ஹொலி­வூட்டின் பிர­பல இளம் நடி­கை­யான எம்மா வட்ஸன், ஐ.நா. ஆண் பெண் சமத்­துவம் குறித்து உரை­யாற்­றி­ய­தை­ய­டுத்து அவரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை வெளி­யி­டப்­போ­வ­தாக இனந்­தெ­ரி­யாத நபர் ஒருவர் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

இம்­மாத முற்­ப­கு­தியில் ஹொலிவூட் நட்­சத்­தி­ரங்கள் பலரின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை அவர்­களின் ஐபோன்­களை ஊடு­ரு­வு­வதன் மூலம் திருடி, அவற்றில் சில படங்கள் இணை­யத்­த­ளங்­களில் கசிய விடப்­பட்­டன. நடி­கைகள் ஜெனிபர் லோரன்ஸ், கெப்­ரி­யெலா யூனியன், மொடல் கிம் கர்­தா­ஷியன் ஆகி­யோரின் படங்­களும் இவற்றில் அடங்கும்.

இந்­நி­லையில் ஐ.நா. மகளிர் விவ­கார நல்­லெண்ணத் தூது­வர்­களில் ஒரு­வ­ராக விளங்கும் எம்மா வட்ஸன், கடந்த சனிக்­கி­ழமை நியூ­யோர்க்கில் நடை­பெற்ற “அவ­ளுக்­காக அவன்” எனும் தலைப்­பி­லான பாலின சமத்­துவம் குறித்த ஐ.நாவின் பிர­சார ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­றினார்.

தன்னை பெண்­ணி­ய­வா­தி­யாக அறி­வித்­துக்­கொண்ட எம்மா வட்ஸன், பெண்­ணி­ய­வா­திகள் ஆண்­களை வெறுப்­ப­வர்கள் அல்ல எனக் கூறி­ய­துடன். பெண்­ணியம் குறித்த கலந்­து­ரை­யா­டல்­களில் ஆண்­களும் பங்­கு­பற்ற வேண்­டு­மெ­னவும் அவர் பகி­ரங்க அழைப்பு விடுத்தார்.

இந்த உரை பலரின் கவ­னத்தை ஈர்த்­தது. பலர் எம்­மாவை பாராட்டி கருத்துத் தெரி­வித்­துள்­ளனர்.

ஆனால், இனந்­தெ­ரி­யாத நபர் ஒருவர், தன்னை பெண்­ணி­ய­வா­தி­யென அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­மைக்­காக அவரின் நிர்­வாணப் புகைப்­ப­டத்தை அடுத்­ததாக வெளி­யி­டப்­போ­வ­தாக மிரட்­டி­யுள்ளார்.

24 வய­தான எம்மா வட்ஸன், ஹரி பொட்டர் திரைப்­ப­டங்­களில் நடித்து புகழ்­பெற்­ற­துடன், பல்­க­லைக்­க­ழக பட்டம் பெறு­வ­தற்­காக சிறி­து­காலம் நடிப்­புத்­து­றை­யி­லி­ருந்தும் ஒதுங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

எம்மா வட்­ஸ­னுக்கு ஹொலிவூட் நடிக நடி­கை­யர்கள், பெண்­ணி­ய­வா­திகள் பலர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.

அதே­வேளை தனது நிர்­வாணப் புகைப்படம் வெளியிடப்போவதாக வெளியான மிரட்டல் குறித்து எம்மா வட்ஸன் அஞ்சுவதாக தெரியவில்லை.

அவர் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் பெண்ணிய ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சீனாவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!
Next post பொலிவூட்டில் அறி­மு­க­மா­கிறார் அனுஷ்கா ஷெட்டி!!