தங்கத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கான நடைபாதை!!
Read Time:1 Minute, 18 Second
சீனாவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வாடிக்கையாளர்கள் நடந்து செல்வதற்கான பாதையை தங்கக் கட்டிகளின் மீது அமைத்துள்ளது.
ஹுபே மாகாணத்தின் யிச்சாங் நகரிலுள்ள சுப்பர்மார்க்கெட் ஒன்றிலேயே இவ்வாறு தங்கத்தின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
நடைபாதையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அக்கண்ணாடிகளின் கீழே 24 கரட் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 600 தங்கக் கட்டிகள் இக்கண்ணாடியின் கீழ் உள்ளன.
அத்தங்கக் கட்டிகள் தலா 2.2 இறாத்தல் எடை கொண்டவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வர்த்தக நிலையத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த தங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
தங்கத்தின் மீது நடந்து செல்வதற்காக பெரும் எண்ணிக்கையான மக்கள் அந்த வர்த்தக நிலையத்துக்குச் செல்கின்றனராம்.
Average Rating