மலையாள ரசிகர்களை பகைத்துக்கொண்ட ஹன்சி!!

Read Time:1 Minute, 58 Second

Hansika-Motwani (1)மலையாள படஉலகில் ஹன்சிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் பேஸ்புக்கில் ஹன்சிகாவை காரசாரமாக திட்டி கருத்துக்கள் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஆனால் ஹன்சிகா இதனை மறுத்தார். நான் மலையாள படங்களில் நடிக்கப் போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன, அப்படி எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார்.

இது மலையாள ரசிகர்களை கோபமூட்டியுள்ளது. மலையாள பட உலகை ஹன்சிகா இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் வெகுண்டெழுந்து உள்ளனர். பேஸ்புக்கில் ஹன்சிகாவை கண்டித்தும் தாக்கியும் திட்டியும் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர் இதற்கு முன் நடித்த படங்கள் பற்றியும் இழிவாக கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகியுள்ளார். ஹன்சிகா தற்போது ‘ஆம்பள’ படத்தில் பிசியாக நடிக்கிறார். இப்படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்கிறார். வைபவ், மாதுரிமாவும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

ஹன்சிகா நடித்த ‘அரண்மனை’ படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது ‘மீகாமன்’, ‘ரோமியோ ஜுலியட்’, ‘வாலு’ படங்களும் கைவசம் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விற்பனைக்கு வரும் பறக்கும் கார்கள்!!
Next post சக்களத்தியாக அறிமுகமானவர் அம்பிகா!!