புழக்கத்தில் இல்லாத 287 சட்டங்கள் ரத்து!!

Read Time:2 Minute, 0 Second

1692615232gavel_scale_book_0நாட்டில் பழமையான, புழக்கத்தில் இல்லாத சட்டங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த சட்டங்களை ரத்து செய்வது குறித்து சிபாரிசு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அதன்படி ஆய்வு செய்த சட்ட ஆணையம், கடந்த 12-ந் திகதி மத்திய சட்ட அமைச்சகத்திடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட நிறைய சட்டங்கள் அர்த்தம் இழந்து விட்டதாகவும், அப்படிப்பட்ட 700-க்கும் மேற்பட்ட சட்டங்களை நீக்கலாம் என்றும் சிபாரிசு செய்திருந்தது.

இந்நிலையில், இவற்றில் முதல்கட்டமாக 287 சட்டங்களை ரத்து செய்ய மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

36 பழமையான சட்டங்களை நீக்குவதற்கான மசோதா, ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேற்கொண்டு 287 சட்டங்களை நீக்குவதற்கான மசோதா, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்துடன் ஆலோசித்து வருகிறோம். மேலும், சட்டங்களை ரத்து செய்வது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை அறியுமாறு எனது துறையை கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் ஜெயாவை சந்திக்க முடியாது திரும்பினார் சரத்குமார்!!
Next post நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற வாலிபர்!!