ஜெயாவின் அவசர பிணை மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!!

Read Time:1 Minute, 25 Second

J Jayalalithaa presenting Anna Gallantry Awardஜெயலலிதாவின் பிணை மற்றும் மேன்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் திகதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் சார்பில், நாளையே (இன்று) விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உட்பட 4 பேரின் மனுக்களுக்கும் இதே நிலைதான் இருந்தது.

இன்று காலை 10.30 மணிக்கு இந்த மனு விசாரணை வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் விசாரணைக்கு தயாராக இருந்தனர். ஆனால், இந்த மனுவை நீதிபதி விசாரணை செய்ய மறுத்தார்.

மேன்முறையீட்டு மனுக்களை வழக்கமாக விசாரணை செய்யும் நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிட்டார். நீதிபதியின் மறுப்பால் மனு வரும் 7ம் திகதிக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்களும் அமெரிக்க கிறீன் கார்ட் விசா பெறும் ஆசை உள்ளவரா..?
Next post சிறுவன் நாய் கூண்டுக்குள் – பாடசாலையை மூட அரசு உத்தரவு!!