விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவு!!

Read Time:1 Minute, 53 Second

250005960divoceஇந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை கால தாமதம் செய்யாமல் ஆறு மாதத்தில் வழக்கை முடிக்கவேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது வரை எந்த நீதிமன்றத்திலும் விவாகரத்து வழக்கு தொடர்பாக சீரான நடைமுறைகளும், செயல்முறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது கண்கூடாக தெரிய வந்துள்ளதாக கூறியுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஜே. ஆர். மிதா, பெரும்பாலான வழக்குகளில் இந்து திருமண சட்டத்தின் படி அதன் உட்பிரிவு எண் 24 மற்றும் 25-ன் கீழ் இடைக்கால பராமரிப்பு மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்து திருமண சட்டம் பிரிவு 21பி-ன் படி விரைவான விசாரணை நடத்த வழிவகை உள்ளதாகவும், தீர்ப்பை ஆறு மாதங்களுக்குள் வழங்கவேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டு உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

ஆனால் விவாகரத்து வழக்குகள் ஆண்டு கணக்கில் நீண்டு வருவதாக தெரிவித்துள்ள நீதிபதி இது கவலை தரும் விஷயம் என்று கூறியுள்ளார். எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வராதா நடிகர்கள்!!
Next post சோப்பு டப்பாவில் கேமிரா செல்போன் பொருத்தி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்!!