எபோலா நோயால் 3000 அதிகமான குழந்தைகள் அனாதைகளாகினர்!!

Read Time:2 Minute, 48 Second

820608912ebolமேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதன் விளைவாகத் தங்களுடைய ஒரு பெற்றோரையோ அல்லது இரண்டு பெற்றோர்களையுமோ இழந்து தனித்துவிடப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது 3,7௦௦-ஆக இருக்கும் என்று ஐ.நா. குழந்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நோயினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட கணிப்பீடுகளின் முடிவுகளே இவை என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகளிலும் லைபீரியாவே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர்கள் இறந்ததினால் புறக்கணிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவிக்கின்றது. இக்குழந்தைகளின் உறவினர்கள் தங்களின் பெற்றோர்கள் இறந்துபோன மருத்துவமனைகளிலேயே அனாதைகளாகக் காணப்படுகின்றனர். அல்லது சிலசமயம் உறவினர்களால் உணவு அளிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடும் இந்த அமைப்பு இதுதவிர மற்ற எந்தத் தொடர்பையும் இந்தக் குழந்தைகளுடன் மற்றவர்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மூன்று, நான்கு வயதுடைய குழந்தைகள் கூட இவ்வாறு காணப்படுவதாக யுனிசெப் கூறுகின்றது. சியரா லியோனில் அடுத்த மாதம் இதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்ட ஐ.நா. அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குமுன்னர் இத்தகைய குழந்தைகளுக்குத் தகுதியான பாதுகாப்பாளர்கள் கிடைக்கவேண்டும் என்று யுனிசெப் எதிர்பார்க்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவாஜி வீட்டு சாப்பாட்டை கிண்டல் செய்த தல!!
Next post 2ஆவது மனைவியாக போகமாட்டேன் – தலைவிதி!!