365 விமானங்களில் 136,020 பயணிகள் ஹஜ் புனித யாத்திரையில்!!

Read Time:1 Minute, 48 Second

952702980hajஇந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்பட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பயணிகளும் சவுதி அரேபியா சென்றடைந்தனர்.

இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான விமானங்கள் இயக்குவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற 394 பேர் கொண்ட கடைசி குழுவினர் நேற்று சவுதி வந்தடைந்ததாக இந்திய தூதரக அதிகாரி முபாரக் தெரிவித்தார்.

நேற்று சென்றடைந்த குழுவில் இரண்டு பா.ஜனதா தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மந்திரி ஆரிப் பெக் தலைமையில் சென்ற இந்த குழுவில் பா.ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் ரஷீத் அன்சாரியும் இடம்பெற்றுள்ளார். இந்த குழுவினரை இந்தியாவுக்கான தூதர் ஹமித் அலி ராவ் வரவேற்றார்.

இந்தியாவில் இருந்து முதல் குழு கடந்த ஆகஸ்ட் 27-ம் திகதி சவுதி சென்றடைந்தது. மதினா சென்றடைந்த அந்த குழுவில் மொத்தம் 235 பேர் இடம்பெற்றிருந்தனர். கடைசி நாளான நேற்று வரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பயணிகள் இந்தியாவில் இருந்து சவுதி சென்றடைந்துள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 365 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹஜ் பயணம் பற்றி விமர்சித்ததால் அமைச்சர் பதவி நீக்கம்!!
Next post இறுதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வராதா நடிகர்கள்!!